Amizhthil Iniyathadi Papa - Tamil learning

வணக்கம்! நான் விஷ்ணுப்ரியா. நான் ஒரு பொறியியல் பட்டதாரி & இல்லத்தரசி. நான் தமிழ் வழிக் கல்வி பயின்றவள்.

தமிழரின் அடையாளங்களில் சிறிதேனும் எஞ்சியிருப்பது தமிழ் மொழி மட்டுமே. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு விருப்பப்பாடமாக உள்ளது என்பதை இந்த ஆண்டு என் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது தான் அறிந்தேன் (2020-21). தமிழ் கற்றுத்தர எண்ணற்ற YouTube Channel-கள் உள்ளன. எனினும் தமிழ் மொழியின் இலக்கண விதிகள், பள்ளியில் தமிழ் பயிலாத குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த YouTube Channel-ஐ தொடங்கியுள்ளேன்.

என்னால் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் பணியை முழுமையாக செய்து முடிப்பேன் என நம்புகிறேன்.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
- மகாகவி பாரதி.


My Email ID
[email protected]