வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சிவன் பாதமே

இந்த உலகில் படைக்கும் கடவுளாக பிரம்மாவும், காக்கும் கடவுளாக திருமாலும், அழிக்கும் கடவுளாக சிவபெருமானும் விளங்குகிறார்கள். ஆனால் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் கோடி கோடியாய் குவிந்துள்ளனர். ஏன் இப்படி? ஒரு அழிக்கும் கடவுளுக்கு இவ்வளவு பக்தர்கள் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றலாம். ஏனென்றால் சிவன் வினைகளை அறுப்பவன் அதாவது உங்களுள் இருக்கும் தீய வினைகளை அறுத்து நல்வினை படுத்துபவன். ஜென்ம ஜென்மங்களாய் உங்களைத் துரத்தும் தீய வினைகளை எல்லாவற்றையும் அழித்து அவற்றிலிருந்து உங்களை விடுவிப்பவன் ஆகிறான் எனவே தான் சிவபெருமானுக்கென்று தனிப்பெரும் கூட்டம் இருக்கிறது.

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சிவன் பாதமே 🔱🔱🔱🔱🔱