Sai Sabari Sastha Seva Sangam

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
அனைத்தும் இறைவன் செயல் 🙇

தெய்வ சிந்தனை கொண்டு, பல்வேறு வழிகளில் இறை தொண்டு புரிந்து வந்த அன்பர்கள், ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து குருவருள் மற்றும் திருவருளால் தொடங்கப்பட்டது Sai Sabari Sastha Seva Sangam SSSSS தனித்தனியாய் மலர்ந்திருந்த மலர்களை, மாலையாக்கி தன் பால் ஈர்க்க வைத்தது ஐயனின் அருள் என்றால் அது மிகை ஆகாது 2015 இல் சபரிமலை சென்று வியக்கத் தக்க தரிசனத்தோடும். ஐயனின் அருளோடும் நால்வரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று நாற்திசைகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னலம் கருதாத அன்பர்களின் பேரியக்கமாக உருவவெடுத்து தொடர்ந்து வளர்கிறது.

இறைவனை நோக்கிய நம் அனைவரது பயணமும் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் அடைய வைத்தது இந்த அமைப்பு தான். கார்த்திகையில் மாலையிட்டு மலைக்கு செல்லும் பக்தர்களாக ஒன்று சேர்ந்தாலும், ஆண்டு முழுவதும், பல வழிகளில் இறை தொண்டும். இயன்ற வரை எளியோருக்கு உதவுவதையும் தொடர்ந்து முழு மனதுடன் சேவை செய்து வருகிறோம்.