Anbu's Life

வணக்கம் உறவுகளே. நடைமுறையில் இருக்கும் நகரமயமாதல், உலகமயமாதல் மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிகொண்டு இருப்பதை பார்க்க நேரிடுகிறது. ஒரு சிறிய இயற்க்கை சீற்றம் வந்தால் கூட எவ்வளவு பணம் இருந்தாலும், உணவிற்காக அடுத்தவர் கையை எதிர்பார்க்க வேண்டிய சூழல். அதனால் தற்சார்பு வாழ்வியலை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயம். இன்று உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் அனைத்தும் வணிகமயமாகி விட்டதன் விளைவு, அனைத்தும் தரமற்றதாகி விட்டது. ஆதலால் நம் வாழ்க்கைக்குத்தேவையான அனைத்தையும் முடிந்தளவிற்கு பிறர் கையை எதிர்பார்க்காமல் நாமே பூர்த்தி செய்துகொள்ள, நாம் எடுக்கும் முன்னெடுப்புதான் தற்சார்பு...இந்த சன்னலில் கல்வி, உழவு, வணிகம், பொருளாதாரம், மருத்துவம், வாழ்வியல் முறைகள் என பல கருத்துகளை பகிர்ந்து...உங்களிடம் கலந்துரையாடி நீங்களும் சில மாற்றங்களை முன்னெடுக்கவும் மேலும் தற்சார்பு வாழ்வியலை செம்மையாக்கவும் விழைகிறேன்...நன்றி.