செங்களம்

நடுநிலைத் தன்மையோடு கூடிய அரசியல், தேசிய இனங்களின் உரிமை/பாதுகாப்பு, திரிபுவாதமற்ற உண்மை வரலாறு, பழந்தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்கள், வீரம், கொடைத் திறன், நிர்வாகத் திறன், சூழலியல்/அறிவியல் சார்ந்த அறிவுத் திறன், மரபுசார் உணவு/மருத்துவம், வழிபாட்டு முறைகள், உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட மகத்தான மனிதர்களின் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் தன்னலமற்ற தியாக வரலாற்றை வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், உள்ளது உள்ளபடியே அலசி ஆராய்ந்து மக்களுக்கு வழங்குவது தான் செங்களம் வலையொலியின் முதன்மையான நோக்கமாகும். இம்முயற்சியில் எள்ளளவும் சமரசமின்றி செங்களம் செயல்படும்.

அதுமட்டுமின்றி, வரும் தலைமுறை பிள்ளைகளின் திறனறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் செங்களம் செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிஞ்சிற்றும் சமரசத்திற்கு இடமில்லாமல், சமூகப் பொறுப்பு உணர்வோடும், அறத்தோடும், விளிம்பு நிலை மக்களின் குரலாக செங்களம் ஒலிக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் பேராதரவை வேண்டி செங்களம்!