நித்தியத்தை தேடும் சத்திய பயணம்

வாரிக்கொடுத்த வள்ளல்கள் மத்தியில் வாழ்வளிக்க வந்த வள்ளல்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட வள்ளல்களில் வடலூர் வள்ளல்பெருமான் நித்திய வாழ்வளிக்க வந்த உத்தம மகான் என்பதை நாம் அறிந்திருப்போம். எனினும் கூட அவரை பற்றி அபரிவிதமாக இங்கு குறிப்பிட விரும்பவில்லை. காரணம்: ஒருவரைப் பற்றி புகழ் பாடினாலே அவர்களின் கொள்கையை பரப்புவதற்காகத்தான் என்று எண்ணி விடுவோம். ஆத்மஞானத்தைப் பற்றி அருளாளரான இராமலிங்க அடிகளார் கூறிய கருத்துகளை பற்றி இங்கு ஆய்வோம். பின்பு அவரைப் பற்றி மேலும் நமக்கு அறியத் தோன்றும். விதை என்பது இருக்குமானால் அதனுள் விருட்சம் (மரம்) என்பது ஒளிந்திருப்பது போல ஒவ்வொரு ஜீவனுள் பிரகாசமான ஆத்ம ஞானம் என்பது மறைந்திருக்கிறது. விதையாலோ, விசித்திரத்தாலோ கடுமையான பயிற்சிகளாலோ அந்த பிரகாசத்தை ஒளிரச் செய்ய இயலாது. இறையருள் என்பது வித்தைக்கோ, விசித்திரத்திற்கோ, கடுமையயன பயிற்சிக்கோ வசப்படுகின்ற பொருளல்ல என்பதை உணரவேண்டும்.