Thiru Aruloli

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு🔥🔥🔥
கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப் பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே🔥🔥🔥
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச் சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஜோதி.🔥🔥🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.🔥🔥🔥

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும்நிலை பெறவும் எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

என்னொடு சேர்ந்திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
-திருஅருட்பிரகாச சிதம்பரம் இராமலிங்கம் வள்ளலார்