Thanuran Vlogs

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
எனது YouTube பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
பலாலி காணி விடுவிப்பு காணொளிகளில் இருந்து எனக்கு இன்று வரை மிகவும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனேகமானோர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் பேசும் எம் உறவுகளே
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

உங்கள் ஒவ்வொருவரின் ஏக்கம் எம் தாய் நாட்டில் நடைபெறும் நம் பண்பாட்டுக் கலை கலாச்சார நிகழ்வுகள் அதனுடன் சேர்ந்து எம் தமிழருடைய பண்டைய வாழ்வியல் சார்ந்த விடையங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே, அதை நான் நன்கு அறிவேன்.

அடுத்து வரும் சந்ததியினருக்கு நமது தமிழர் வாழ்வியல், சமூக சமய பண்பாட்டு விழுமியங்களை நமது பிள்ளைகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உங்களுடைய ஏக்கம் எனக்கு புரிகின்றது.
அந்த வகையில் என்னால் முடிந்தவரை எனது YouTube Channel மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம் என்று எதிர் பார்க்கின்றேன்.

இனிவரும் காலங்களில் உங்களுடைய எதிர் பார்பை பூர்த்தி செய்யும் வகையில் எமது வாழ்வியல் காலாச்சாரம் சமய சமூக விடயங்களை உள்ளடக்கியதான காணோளிகளை எதிர் பாருங்கள்