Semmai Kalvi

செம்மைக்கான இணைய வழிக் கல்வித் தளம்.
ஆசான் ம.செந்தமிழன்

தமிழ், எண்ணியல், செம்மைக் கொள்கைகள் ஆகியன பாடங்கள். உடல்நலம், இயற்கையியல், ஐம்பூதக்கொள்கை, முப்பொருள் கொள்கை உள்ளிட்டவை யாவும் செம்மைக்கொள்கை எனும் பாடத்தில் உள்ளன. சிறாருக்குப் புரியும் வகையில் இப்பாடங்களை செம்மை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.

வேளாண்மை, ஆநிரை வளர்ப்பு, கட்டுமானம், வீட்டு மருந்துசெய்முறைகள், நீர்நிறை நுட்பங்கள் உள்ளிட்டவை செம்மை நுட்பம் எனும் பிரிவில் கற்பிக்கப்படும்.

ஊழிக் கல்வி என்பது ஊழி நூலினை அடிப்படையாகக்கொண்டு புவிகொள்கைகள், உயிரினக் கொள்கைகள், வாழ்வியல் கொள்கைகளைக் கற்பித்தல் ஆகும். இப்பாடத்தினை ஆசான் ம.செந்தமிழன் கற்பிக்கவிருக்கிறார்.