அன்ன வயல் ANNA VAYAL (உணவுக் காடு)

அன்ன வயல்
செயலே விடுதலைக்கான வழி

ஆறு பேர் கண்ட அன்ன வயல்: இயற்கை விவசாயத்தை போற்றும் இளைஞர்கள்!

இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தவும், அவர்களே அவர்களுடைய பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளவும் இயற்கை விவசாயிகள் ஆறு பேர் சேர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், ‘அன்ன வயல்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

"இதன்மூலம், அடுத்த தலைமுறைக்கும் இயற்கை விவசாயத்தின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்” என்று சொல்லும் இவர்கள், “இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர் மேலாண்மையைச் சொல்லித் தருதல், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தால், இயற்கை விவசாயத்தை பரவலாக்குதல் - இவற்றின் மூலம் உணவே மருந்து என்ற மந்திரத்தை மக்களை உச்சரிக்க வைப்பது. இதுதான் எங்களது நோக்கம்”

https://www.hindutamil.in/amp/news/others/96840-.html