தமிழர் விண்ணியலும் வாழ்வியலும்

எனக்கு ஏழு வருடங்களாக, வானைப் பார்த்து புரிந்த, 3600 வருடங்களுக்கு முன்னாள் நம் வின்னவனால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க கணக்குகளை, உங்கள் அனைவருக்கும் எளிதாக புரிய வைத்து விடலாம் என்று தான் ஆரம்பித்தேன். நம் சித்தர்கள் வடித்த விண்ணியல், நம் வரலாறுகளை தக்க வைத்து வானில் விண்மீன்கள், கண் சிமிட்டிக் கொண்டு அமைதியாக நமக்கு, தினமும், யாரும் மறைக்க முடியாத உயரங்களில் நம் வாழ்வியலுடன் பின்னிப் பினைந்த வானம் காத்துக் கிடக்கிறது. ஆனால் இந்த 70 ஆண்டு காலம், திட்டமிட்ட மாற்று பாடத் திட்டங்களால். நாம் மழங்கடிக்கப்பட்டதால் 20,000 வருட விண்ணியல் அறிவு மயங்கி புதைந்து உள்ளது. அதை மேலே பார்க்க, பார்க்க எனக்கு புரிந்த வகையில் உங்களுக்கும் புரிந்து விடும் என நம்புகிறேன்.