MalliSam

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . நான் மல்லிகா ஞானேஸ்வரி ஸ்வாமிநாதன். Mallisam என்கிற எனது இந்த சேனல் ஆன்மீகம் சார்ந்த சேனல். வாழ்வின் நோக்கம் பரம்பொருளை உணர்வது தான். அதற்கு நம்மை வழி நடத்துபவை நமது இதிகாச புராணங்களும் அறநூல்களுமே. எனவே அவை சார்ந்த விஷயங்களை இதில் பதிவிட்டு வருகிறேன். அந்த வகையில் கோவில்கள் பற்றிய தகவல்கள், அருளாளர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகள் துதிப்பாடல்கள், பக்திப் பாடல்கள்,ப்ரபந்தம், திருப்புகழ், கர்னாடக சங்கீதம் ஆகியவை இதில் இடம் பெறும். அறநூலாகிய திருக்குறளும் அடிப்படையில் இதிகாச புராண உபநிடத கருத்துக்கள் சார்ந்ததே என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. திருக்குறள் விளக்கமும் அதன் அடிப்படையில் இங்கு பதிவிட்டு வருகிறேன்.
உயிர் வாழ அடிப்படை தேவை உணவு. அதுவும் இறைவனுக்கு நிவேதனம் ஆகும் பொழுது நமக்கு அமுதமாய் ஆகிறது. வீட்டில் செய்யக்கூடிய எளிய சைவ சமையல் குறிப்புகளும் பதிவிட்டு வருகிறேன். இறை அருளாலே இறை தாள் பணிவோம்.