Salem Samayapuram Temple

அருள்மிகு ஸ்ரீ சேலம் சமயபுரம் மாரியம்மன் சக்தி பீடம்.

சேலம் மாவட்டம் சாமிநாதபுரம், வண்டிப் பேட்டை,புதிய பேருந்து நிலையம் பின்புறம் அருளாட்சி செய்து கொண்டு இருக்கிறாள் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான தாய் சமயபுரம் மாரியம்மன்.

குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு மாதம் அமாவாசை தோறும் நடைபெறும் கும்ப படையலில் கலந்து கொண்டு பயனடைந்தோர் பலர்.

நினைத்த காரியங்கள் ஈடேற அம்மன் முன் சூலத்தில் மஞ்சள் நிற வஸ்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து கொடுத்தால் அம்பாள் நாம் நினைத்ததை அவள் முடித்து கொடுப்பாள் என்பது உண்மை.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை. பௌர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். அமாவாசை தோறும் கும்ப படையல் நடைபெறும்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும்.

பங்குனி மாதம் மாதத்தில் திருவிழா நடைபெறும்.

தொடர்புக்கு:6382507740