AdhikaalaiTamilChannel அதிகாலைதமிழ்ச்சேனல்

வணக்கம்! கன்னித்தமிழை கணினித்தமிழாக்கிய, நம் தமிழ் ஊடகச்சிந்தனையாளர்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்புவோம். அச்சு ஊடகத்தில் பயணம் செய்த நம் தமிழ்த்தாயின் அடுத்த வாகனம் இணையம். இனி அவளின் கொடிதான். பசுந்தமிழுக்கு இணையவழி பல்லக்குத்தூக்கும் பணியில் இதோ நாங்களும். எமது தளம், எந்தவொரு அரசியல் சார்புக்குள்ளும் அடைபடாதது. சித்தாந்தக்கூண்டுகளுக்குள் சிறைபடாதது. குழு மனப்பான்மைக்குள் கூடாரம் போடாதது. முற்றிலும் நம் தமிழ்ச்சமூகத்தின் உச்சமே நமது எல்லை. மானுடம் வெல்வதே நமது மந்திரம்! உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப்படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள். உடனடிச்செய்திகள், அரசியல், இலக்கியம், திரையுலகம், ஆன்மீகம், பிரபலங்களின் நேர்காணல், குறும்படங்கள், விவாதங்கள், மருத்துவக்குறிப்புகள், சமூக நிகழ்வுகள், சமையல் இப்படி சாப்பாடு முதல் சாஃப்ட்வோ் வரை ஏராளம். இந்தியாவின் முதல் யூடியூப் சேனல்களில் அதிகாலையும் ஒன்று என்பதை பெருமையுடன் தொிவித்துக்கொள்கிறோம். தயவு செய்து காணுங்கள், கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி!