Thiyagam Potruvom - தியாகம் போற்றுவோம்

வணக்கம்,
நமது தாய் நாட்டிற்காக நமது நாட்டின் எல்லையில் நமது வீரர்கள், தனது தாய்-தந்தை, மனைவி-மக்கள், குடும்பம்-நண்பர்கள் என அனைத்தையும் துறந்து அங்கே எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கும் போது, தங்கள் உடல்-உயிர் என அனைத்தையும் நமது நாட்டுக்காக தியாகம் செய்து நம்மை பாதுகாக்கின்றனர்.
ஆனால் இன்று பல மாணவர்களும் மக்களும் அவ்வீரர்களின் தியாகங்களை உணராமலேயே இங்கு வழி தவறி வாழ்கின்றனர். இது வருத்தற்திற்குரியது மட்டுமல்ல; கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
எனவே இன்றைய மாணவர்களிடையேம் மக்களிடையேயும் எல்லையில் நம்மைக் காக்க நமது பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம், ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
நமது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அவ்வீரர்களின் தியாகங்களை உணரச் செய்து, நாட்டுப்பற்றுள்ள மாணவ, மக்கள் சமூகத்தைப் படைப்போம்.

தியாகம் போற்றுவோம்
ஜெய்ஹிந்த்!