Paranjothi Pandian

சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசகர். 22 வயதில் இருந்து 25 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் களப்பணியாற்றும் தோழர். ரியல் எஸ்டேட் நிலவரங்களை அடிவேர் வரை கற்று வைத்து நிலைத்த நீடித்த அனுபவம் பெற்றவர். எப்பொழுதும் செயலில் இறங்குபவர் (Action Taker), ஆழ்ந்த சிந்தனையாளர்(Thinker)அதிக உற்பத்தி திறன் உடையவர் (High Performer).

நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியர் பல ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு பக்கபலம் மற்றும் வழிகாட்டி. நில சிக்கலில் மாட்டிகொண்டவர்களை விடுவிப்பதில் சாதுரியமானவர்.

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம்-2 ரியல் எஸ்டேட் அகராதி -3 வருவாய் துறை மானிய கோரிக்கை -4 முரண்பாடற்ற சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பே சாமானியர்களின் இலச்சியம் என்ற ஐந்து Best Seller புத்தகங்களின் நூல் ஆசிரியர். நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை நிறுவி தமிழக முழுவதும் உள்ள சாமானியர்களுக்கு நிலம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்