🔥பாகம் 3🔥சப்பர ஊர்வலம் 03.10.25🔥
Автор: Arulmihu Santhanamaari
Загружено: 2025-12-17
Просмотров: 117
❤❤தசரா திருவிழா❤❤-
🌈🌈03.10.25 அதிகாலை 5 மணி அளவில் பக்தர்களை நேரில் சந்தித்து அருள் பாலிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சப்பரம் ஏறி புறப்பட்டாள் தூத்துக்குடி தென் பாகம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மாள். 10 வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்நிகழ்வு நடக்கிறது. ஆதலால் பக்தர்கள் நள்ளிரவிலும் கூட தங்கள் வீடுகளில் வாசல் தெளித்து வண்ணக் கோலமிட்டு பூஜைப் பொருட்களுடன் காத்திருந்தனர். அம்மனை வரவேற்று அகமகிழ்ந்தனர். குடும்பத்தினருடன் வணங்கி அம்மனின் ஆசியைப் பெற்றனர். அம்மனுடன் வந்த தொண்டர்களை உபசரித்து மகிழ்ந்தனர்.
மூன்று நாட்களாக தூத்துக்குடி நகரின் பல பகுதிகளுக்கும் சென்று பக்தர்களைக் சந்தித்து அகமகிழ்ந்தாள் சந்தன மாரியம்மாள்.
மூன்று நாட்களாக இரவு பகலாக குளிரைப் பொருட்படுத்தாமல் மெய் வருத்தம் பாராது அம்மனோடு பயணித்து இந்த அருள் நிகழ்வை சாத்தியமாக்கிய பக்தர்கள் திரு.இசக்கி, திரு.இசக்கிப்பாண்டி, திரு.குமார் ராஜா, திரு. தர்மலிங்க ராஜா, திரு. துரை முருகன் ஆகியோருக்கு மிக மிக நன்றி.
அம்மனுடன் கூடவே வந்து எங்களை வழிநடத்திய திரு.A.சந்தனப்பாண்டியன் அவர்களுக்கு மிக மிக நன்றி.
கூடவே பயணித்து பக்கபலமாக இருந்த திரு.S.வினோத்குமார் பாண்டியன் அவர்களுக்கு மிக மிக நன்றி.
அம்பாளுடன் பயணித்து பக்தர்களுக்கு அருட்பிரசாதங்களை வழங்கிய அம்பாள் உபாசகர் திரு.M.நாகராஜன் அவர்களுக்கு மிக மிக நன்றி.
இந்நிகழ்வின் 3வது பாகமாக இந்த காணொளி வருகிறது..-
பாருங்கள்:💗💗💗
பகிருங்கள்💗💗💗
🌈🌈வாழ்க வளமுடன்.🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏Attributions🙏🙏🙏🙏🙏🙏
Song Title : 🔥தென்பாகம் சந்தனமாரி🔥
Composed by :
CJ மைக்🎶🎹🥁
Lyrics :
A.Pa. ராஜா✏✒🖋🖊🖍
Vocals :
நாஞ்சில் கிரீஷ்🎤🎧
Instrumentalist :
சாலமன் ப்ரூட்டோ. D.V.🎸🎻🎷
Produced by Vijisri’s DISA Creations
Produced in CJ.Studio, Maduravoyal,
Chennai-95
பாடல் வரிகள்
ஓம்……..
வங்கக்கடல் ஈரத்திலே….
முத்துநகர் ஓரத்திலே…..
சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள்தாயே….
நிர்கதியாய் வந்து நின்றோம் நாங்கள்……
பொற்பதமே… அற்புதமே…
ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே…..
சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாயே…….
ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே…..
தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி…
நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி…….
தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி…
நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி…….
கண்ணில் கடல் பொங்குதம்மா…
உந்தன் பெயர் சொல்லுதம்மா…
நெஞ்சில் ஒருவித ஏக்கம்…
உன் பார்வை பட துன்பம் தீரும்..
காளி உன்னைக் காண வந்தோம்…
அருள் புரியும் தாயே…..
நாடி வந்த சந்ததிக்கு….
கதி அது நீயே….
சோதி வடிவாய் ஆனவளே…..
செண்பகமே … எங்கள் மங்கலமே…..
சோதி வடிவாய் ஆனவளே…..
செண்பகமே … எங்கள் மங்கலமே…..
தாக்கும் பிணிகள் உன்னை
நோக்கும் நொடி ஓடும்…
நாளும் எங்களை நீ
காத்தருள வேண்டும்….
சந்தனமாரி எங்கள் குங்குமக்காளி
நீ தொட்டால் வினை
காத்தோடு தான்
விட்டோடும் தாயீ…
பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி…
வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி…
சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி…
சந்திரனைக் காதணியாய் அணிந்தாய் போற்றி….
தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி…
நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி…….
தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி…
நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி…….
கண்ணில் கடல் பொங்குதம்மா…
உந்தன் பெயர் சொல்லுதம்மா…
நெஞ்சில் ஒருவித ஏக்கம்…
உன் பார்வை படத் துன்பம் தீரும்..
பாரில் உன்னைக் காண வந்தோம்…
அருள் புரியும் தாயே…..
நாடி வந்த சந்ததிக்கு….
கதி அது நீயே….
பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி…
வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி…
சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி…
----------------------/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: