ஊர் போற்றும் தியாகம் 🙏 A sacrifice of patriotism!
Автор: EDIT MEDIA WORKS
Загружено: 2025-10-13
Просмотров: 199
சென்னை மேற்கு சைதாப்பேட்டை, பழைய எண்: 3, பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள இல்லத்தில், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர் திரு.ரங்கநாதன் குடும்பத்தினர். திரு.ரங்கநாதன் அவர்களுக்கு, வாசுதேவன் மற்றும் எத்திராஜ் ஆகிய சகோதரர்கள் உள்ளனர்.இவர்களது தந்தை தெய்வத்திரு.R.கமலநாபன், தாயார் பிரேமா கமலநாபன் ஆவர். தந்தை தெய்வத்திரு கமலநாபன் அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது உயிர் பிரிந்தாலும், இவரது கண்கள் சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. உடல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டது. இவரது தாயார் திருமதி. பிரேமா கமலநாபன் அவர்களும், கடந்த 09.10.2025, வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். இவரின் கண்களும் சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இவரது உடலும், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டது. இறந்தும், தனது கண்களையும், உடலையும் தானம் செய்த அம்மையாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியன் அவர்களும் அம்மையாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது பெற்றோர் போல், பிறரும் கண் தானம், உடல் உறுப்பு தானம், உடல் தானம் என பிறருக்கு பயன்படும் வகையில் உதவ முன்வரவேண்டும் என்று திரு.ரங்கநாதன் அவர்கள் வலியுறுத்தினார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: