நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் நூல் - அவுஸ்ரேலியாவில் நடந்த வெளியீட்டு விழா பாகம் 4
Автор: ILANKAI SAIVISM ORG
Загружено: 2022-05-29
Просмотров: 9
நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் நூல், சைவசமயத்தின் அடையாளமாகிய விடைக்கொடியின் (இடபக்கொடியின்) சிறப்பை விளக்குமாறு, விடைக்கொடிச்செல்வர் ,சைவநெறிக் காவலர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனாரால் தொகுத்தளிக்கப்பட்ட நூலாகும்.
விடைக்கொடிகளைத் தாமே தம் சொந்தச் செலவில் உருவாக்கி, இலங்கை முழுவதும் வழங்கிப் பரப்பியதோடு மட்டுமல்லாது, தமிழ்நாடு, பிரித்தானியா,கனடா,அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா,சுவிஸ்லாந்து,ஜேர்மன்,நெதர்லாந்து என்று தமிழர் வசிக்கும் நாடெங்கும் இடபக்கொடிகளை இலவசமாக வழங்கி, உலகளாவியரீதியில் இடபக்கொடிக்கு சிறப்பை உருவாக்கிய பெருமகனார், விடைக்கொடிச்செல்வர் ,சைவநெறிக் காவலர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனார்.
இலங்கை அரசாங்கத்தின் சைவசமயப் பரிபாலன அங்கமாக விளங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சைவசமயக் கொடியாக ஏற்கப்பட்டு, இந்துப்பண்பாட்டினை இலங்கையில் அடையாளப்படுத்தும் கொடியாக ஏற்கப்பட்டு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பல இலட்சங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கி, இடபக்கொடியினை அச்சடித்து இலவசமாக அரச திணைக்களத்தினாலேயே விநியோகிக்கப்பட, இந்து கலாசார அமைச்சராக விளங்கிய தருமபூஷணம்,சைவத்திரு.தியாகராசா மகேசுவரனாரின் உதவியுடன் ஆவன செய்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: