Naatu Kozhi Aasari Varuval | நாட்டு கோழி ஆசாரி வறுவல் | Spicy Aasari Chicken | | Cookd
Автор: Cookd Tamil
Загружено: 2021-10-01
Просмотров: 82697
மிகவும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யவும் @ https://bit.ly/cookd-tamil
நாட்டு கோழி ஆசாரி வறுவல் கிராமத்து பாணியில் மிகவும் எளிய முறையில் செய்யப்பட்ட ரெசிபி. குறைந்த நேரத்தில் சுவையான நாட்டு கோழி ஆசாரி வறுவல்செய்து உண்டு மகிழுங்கள். இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
நாட்டு கோழி ஆசாரி வறுவல் செய்முறை:
நாட்டு கோழி (சிறிய துண்டுகள்) - 1 கிலோ
நல்லெண்ணெய் - ½ கப்
காய்ந்த மிளகாய் (விதை நீக்கப்பட்டது) - 20
சிறிய வெங்காயம் - 300 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
உப்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1½ டீஸ்பூன்
சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
சமையல் வழிமுறைகள்:
1. ஒரு பெரிய கடாயில், நல்லெண்ணெய்யை சூடாக்கவும்.
2. சூடான எண்ணெயில் துண்டுகளாக்கப்பட்டு, விதை நீக்கப்பட்ட காய்ந்த மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3. வாணலியில் சிறிய வெங்காயம் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
5. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட நாட்டு கோழியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், சிக்கன் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
7. தண்ணீரைச் சேர்த்து, அனைத்து நீரும் வற்றி, இறைச்சி மென்மையாகும் வரை நடுத்தர உயர் வெப்பத்தில் சுமார் 35-40 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்
8. அடுப்பில் இருந்து நீக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
உங்கள் சமயலறைக்கு மிகவும் அதிக தரமான சமையல் பாத்திரங்கள் வாங்க இந்த லின்கை கிளிக் செய்து Cookd ஷாப்பில் வாங்குங்கள் - https://shop.cookdtv.com
எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் - / cookdtv
எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் - / cookdtv
எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் - / cookdrecipes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: