கோவை க.க. சாவடியில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் தாமரை கோலத் திருவிழா நடிகை நமீதா பங்கேற்பு
Автор: NOW INDIAR TIMES TV
Загружено: 2026-01-19
Просмотров: 8
கோவை க.க. சாவடியில்
பா.ஜ.க மகளிர் அணி சார்பில்
தாமரை கோலத் திருவிழா
நடிகை நமீதா பங்கேற்பு
பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மற்றும் எட்டிமடை பேரூராட்சி பொதுமக்கள் சார்பில் கந்தே கவுண்டன் சாவடியில் மாநில மகளிர் அணி செயலாளர் அருணாதேவி மோகன்ராஜா ஏற்பாட்டில், தைப்பொங்கலை முன்னிட்டு ஆயிரம் தாமரைகள் கோலங்களாக வரைந்து "தாமரை கோலத் திருவிழா" கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க முக்கிய நிர்வாகியும், திரைப்பட நடிகையுமான நமிதா கலந்துகொண்டு சிறப்பித்தார். ரேக்ளா வண்டியில் ஊர்வலம், வள்ளி கும்மி ஆகிய நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தராஜன், மாநில சிறுபான்மை அணி தலைவர் ஜான்சன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மஞ்சுகுமரன், மாவட்ட விவசாய தலைவர் மகேஷ் குமார், ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம், பேரூராட்சி பொறுப்பாளர் சதீஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: