இலங்கை🇱🇰 மண்டூர் கந்தசுவாமி கோவிலில் வேலாயுத சுவாமி ஐயாவிற்கு வேல் வழங்கப்பட்டது
Автор: Mani simma
Загружено: 2025-09-25
Просмотров: 276
வரலாறு:-
கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன.
மண்டூர் Murukan கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் அழகிய தேரில் வைத்து கொடியேற்றச் சீலையை நல்லூர் செங்குந்தர் ஆண்டுதோறும் கொடுப்பது வழக்கம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: