7.6.2024 ரமணகிரி சுவாமிகள் குருபூஜை விழா,
Автор: Maayaandi Ayya
Загружено: 2024-06-13
Просмотров: 194
7.6.2024 ரமணகிரி சுவாமிகள் குருபூஜை விழா
ஸ்ரீ ரமணகிரி அவர்கள் 1921 ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி ஸ்வீடனில் பிறந்தார்.மிகப் பெரிய ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் அவருடைய இயற்பெயர் அலெக்சாந்தர் வெஸ்ட்லிட், பிறவியிலேயே சைவம் பள்ளிப் பருவம் முடிந்து இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர் சிறிய வயதில் முருகன் அருளால் உயிர் பிழைக்க பெற்றவர்.காசி பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நான்கு வேதம் கற்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இடம் மாணாக்கராக பயின்றவர்.வடக்கே பாபாஜியிடம் தீட்சை பெற்று காசியில் ராஜ யோக பயிற்சி பெற்று அத்வைத ஞானத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தெற்கே வந்தவர் வரும் வழியில் திருவண்ணாமலையில் பகவான் ரமணமகரிஷியை சந்தித்து அவர் அருள் பெற்று அவரிடம் பிட்சாபாத்திரம் பெற்று இங்கே தனியே பயிற்சி பெற்று 34 வயதில் ஜீவ சமாதி நிலை அடைந்தார்.அவர் ஞானம் பெற்ற நாள் மகாசிவராத்திரி அவர் முக்தி அடைந்த நாள் மிருகசீரிட நட்சத்திரம் வைகாசி மாதம் ஆயிரத்து 1955 சுவாமி ரமணகிரி அருளால் மக்கள் அனைவரும் நல்ல முன்னேற்றம் அடைந்து சகல வசதிகளுடன் இருந்து வருவது சத்திய பூர்வ உண்மை. அவர் அருளால் பல அன்பர்களுக்கு பலவித நிவர்த்திகள் நடந்து கொண்டிருக்கின்றது. நீங்களும் சகலவித அஷ்ட ஐஸ்வர்யங்களை ஞானம் அடைய எல்லாம் வல்ல சுவாமி ரமணகிரி அருள்புரிவார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: