சிக்கன் பிரான்கி செய்வது எப்படி | சிக்கன் ரோல் | Chicken Frankie Recipe in Tamil | Cookd
Автор: Cookd Tamil
Загружено: 2023-01-06
Просмотров: 1397
மிகவும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யவும் @ https://bit.ly/cookd-tamil
சிக்கன் பிரான்கி சாப்பிட கடைக்கு செல்ல வேண்டாம், இந்த ரெசிபியை பார்த்து உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழலாம். கமெண்ட்ஸ் செக்ஷனில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.
மேலும், நீங்கள் இன்னும் எங்கள் கடையைப் பார்த்தீர்களா? உங்களுக்கு பிடித்த சமையல் குறிப்புகளை ஒரு பெட்டியில் வாங்கலாம். இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் 👉 https://shop.cookdtv.com
சிக்கன் பிரான்கி செய்ய தேவையான பொருட்கள்:
பிரான்கி மசாலா :
சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீராக தூள் - ½ டீஸ்பூன்
உளர் மாங்காய் தூள் - ½ டீஸ்பூன்
சாட் தூள் - ¼ டீஸ்பூன்
கரம் தூள் - ¼ டீஸ்பூன்
பூரணம் :
எண்ணெய் - 3 தேக்கரண்டி + 1 டீஸ்பூன்
வெங்காயம் (நறுக்கியது) - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சீராக தூள் - ½ டீஸ்பூன்
தக்காளி சாறு - 3 தக்காளிகளில் இருந்து
எலும்பில்லா சிக்கன் துண்டுகள் (சிறியது) - 500 கிராம்
தண்ணீர் - ½ கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - ½ டீஸ்பூன்
பச்சை குடைமிளகாய் (ஜூலியன்) - ½ கப்
கரம் தூள் - ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2
சர்க்கரை - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி இலை (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மற்ற முழ பொருட்கள் :
சப்பாத்தி - 4
முட்டை (அடித்தது) - 2
மயோன்னைஸ் - 4 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி
செய்முறை:
1. பிரான்கி மசாலாவிற்கு தேவையான பொருட்களை கலந்து தனியாக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் சேர்த்து, லேசாக பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
4. உலர்ந்த பொடிகளைச் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்.
5. நறுக்கிய தக்காளியைச் சேர்த்து அதில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
6. பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. சிக்கன் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கவும். கோழியை 10-15 நிமிடங்கள் சமைக்கவும்.
8. சிக்கனை நன்றாக சீசன் செய்து நன்றாக கலக்கவும்.
9. குடமிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும். பூரணத்தை ஒதுக்கி வைக்கவும்.
10. ஒரு தவாவை சூடாக்கி, சப்பாத்தியை இருபுறமும் 50% வேகவைக்கவும். அதை தவாவில் இருந்து எடுக்கவும்.
11. அதே தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து சமமாகப் பரப்பவும்.
12. அதன் மீது சிறிது உப்பு மற்றும் மிளகு தூவி. உடனே பாதி வேகவைத்த சப்பாத்தித் துண்டை அதன் மேல் வைத்து புரட்டவும்.
13. சப்பாத்தி நன்றாக வேக விடவும். தவாவில் இருந்து எடுத்து ஒரு பலகையில் வைக்கவும்.
படிப்படியான செய்முறைகள் முதல் ஸ்மார்ட் ஷாப்பிங் பட்டியல்கள் வரை, உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் Cookd செயலியில் கிடைக்கிறது. https://app.cookdtv.com/ftp இல் பதிவிறக்கி கொள்ளுங்கள்.
எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் - / cookdtv
எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் - / cookdtv
எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் - / cookdrecipes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: