தொட்டியம் தேரோட்டம் 2025 |thottiyam Madurai kaliamman therottam |மதுரை காளியம்மன் கோவில் தேரோட்டம் |
Автор: Trichy Diary
Загружено: 2025-04-03
Просмотров: 8809
#thottiyam
#aanmeegam
#trichy
#amman
திருச்சி 03-04-2025
பிரசித்தி பெற்ற தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா - பிரம்மாண்டமான இரு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வீதி உலா சென்றனர்
தமிழகத்திலேயே உயரமான தூக்கு தேர் திருவிழா....
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி அன்று முதல் தட்டு சாத்துதல், 18-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 25-ம் தேதி காப்பு கட்டுதல், கதவடைத்த கோவிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கல் வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை, பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 31 அடி உயரம் உள்ள பெரிய தேரையும், 30 அடி உயரம் உள்ள சிறிய திருத்தேரையும் பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு திருவீதி உலா சென்றனர்.
பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு, வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதனை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்று பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்வும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த 18 பட்டி கிராம பொதுமக்கள்,
கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்கள் பெருந்திரளளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மேற்பார்வையில், முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: