Aasai Aaginaen Kovae || Tamil ChristianKeerthanai | |VedanayagamSastriar || SastriarMrs.Sarah Martin
Автор: The Martins
Загружено: 2021-10-25
Просмотров: 3283
Song : Aasai Aaginaen Kovae
Album : Raja Raja Pidha
Lyric : Sangai Vedanayagam Sastriar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Clement V. Sastriar
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : Prof.Martin Devaprasath, The Matins
பாடல் வரிகள்
ஆசையாகினேன் கோவே
உமக்கானந்த ஸ்தோத்திரம் தேவே
இயேசுக் கிறிஸ்து மாசத்துவத்து
இரட்சகா ஒரே தட்சகா
1. கானான் நாட்டுக் கரசே – உயர்
வான் நாட்டார் தொழும் சிரசே – நானாட்ட
முடன் தேடித் தேடி நாடி பதம்பாடி
2. ஆதி மானிடர் கெட்டா - மகா
அற்புதமான கொண்டாட்டா
வேதநாயகன் பாட்டு
படித்து விரும்பி
மனம் திரும்பி
பாடலின் பொருள்
பல்லவி
தெய்வமே உமக்கு எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு. நன்றிகளை ஏறெடுக்க அரசே பெரிதும் ஆசை நான் கொள்கின்றேன்.
அனுபல்லவி
மிகப்பெரிய உண்மைப்பொருளின் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவே, ஒரே படையலானவரே.
சரணங்கள் 1
கானான் நாட்டிற்கு ராஜாவே, பரலோகத்தில் உள்ளோர் வணங்குகின்ற தலைவரே, நான் மிகுந்த ஆர்வத்துடன் உம் பாதங்களைத் தேடித்தேடி, நாடி, அதனைப் பாடிப்போற்றிட ஆசைப்படுகின்றேன்.
சரணங்கள் 2
ஆதிகால மக்களாகிய இஸ்ரவேலருக்கு, எண்ணிப்பார்க்க முடியாத பாவமன்னிப்பை அருளிய அதிசயமான மகிமைக்குரியவரே, வேதநாயகனாகிய நான் உமது பாடலை இயற்ற விரும்பி மன மற்றமடைந்தேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: