மரத்தேரில் அம்மன் வீதியுலா, கரகோஷம் எழுப்பி வடம் பிடித்து இழுக்கும் மகளிர்
Автор: Media 369
Загружено: 2025-12-01
Просмотров: 195
கார்த்திகை தீபத் திருவிழா பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள பல்லாயிரக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகளை சுற்றி இழுத்து வழிபாடு....
பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வழிபடக்கூடிய பராசக்தி அம்மன் தேரை பல ஆயிரக்கணக்கான பெண்கள் தேரின் சக்கரத்தின் இருபுறங்களிலும் வடம் பிடித்து இழுத்து வழிபாடு....
திருவண்ணாமலை மாநகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவான இன்று பராசக்தி அம்மன் பெரிய மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தேரின் நான்கு சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர், அதனை தொடர்ந்து பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வரக்கூடிய பராசக்தி அம்மன் தேர் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கரகோஷத்துடன் பராசக்தி அம்மன் தேரை பல்லாயிரக்கணக்கான பெண்கள் இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக காலையும் மாலையும் இரு வேலைகளில் சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் முக்கிய திருவிழாவாக கருதப்படக்கூடிய ஏழாவது நாள் திருவிழாவான இன்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் திருக்கோவிலின் 16 கால் மண்டபம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகளின் மரதேர்களில் தனித்தனியாக எழுந்தருளினார்கள்.
அதனை தொடர்ந்து பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் தேரின் நான்கு சக்கரத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர், பின்னர் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகளை சுற்றி ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கரகோசத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன் தனித்தனியே மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது, அதனை தொடர்ந்து பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வரக்கூடிய பராசக்தி அம்மன் தேர் புரப்பாடு நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர், பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பராசக்தி அம்மன் தேரோட்டத்தை தொடர்ந்து சிறுவர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வரக்கூடிய சண்டிகேஸ்வரர் தேர் திருவிழா நடைபெற்றது, இதில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தேரின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் நின்று வடம் பிடித்து சண்டிகேஸ்வரர் தேரை நான்கு மாட வீதிகளை சுற்றி இழுத்து வந்து வழிபட்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: