திருவண்ணாமலையில் திமுகவினருக்கு அடையாள அட்டை ஏன் தயார் செய்ய வேண்டும்!? பாஜக நிர்வாகி கேள்வி!
Автор: Shalini TV Updates
Загружено: 2025-12-02
Просмотров: 821
கார்த்திகை தீப திருவிழா அடையாள அட்டை தயார் செய்யும் பணியில் திமுக கட்சியினர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்யும் அவல நிலை......
பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமல் திமுக கட்சிக்காரர்களுக்கு அடையாள அட்டை ஏன் தயார் செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி கேள்வி.....
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோவில் பணியாளர்கள், கோவில் ஊழியர்கள், எந்தெந்த இடங்களில் பணி செய்ய வேண்டும் அவர்களுக்கு உண்டான பணி என்ன என்று அவர்களுக்கு தெரிவித்து அவர்களுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் பணிகளை தனியார் ஒருவரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்தது.
இந்நிலையில் அடையாள அட்டை தயார் செய்யும் பணியில் தனியார் ஒருவர் திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே உள்ள யாத்திரை நிவாஸ் என்ற பயணிகள் தங்கும் விடுதியில் அடையாள அட்டை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக கோயில் ஊழியர்கள், சாமி தூக்கும் தொழிலாளர்கள், கட்டை தூக்கும் தொழிலாளர்கள் என கோவிலுக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அடையாள அட்டையை தயார் செய்ய வேண்டிய இடத்தில் திமுக கவுன்சிலர்கள், திமுக கட்சிக்காரர்கள், திமுக கட்சிக்காரர்களின் உறவினர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் என பல்வேறு திமுக கட்சியினர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்வது குறித்து பாஜக பாமக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் யாத்ரி நிவாஸ் பயணிகள் தங்கும் விடுதியில் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்த போது ஆயிரக்கணக்கில் திமுக கட்சிக்காரர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக சாமியே இல்லை என்று சொல்லும் திமுக கட்சியினர்களுக்கு எவ்வாறு அடையாள அட்டை தயார் செய்யப்படுகிறது என்றும், திருவண்ணாமலை நகர வாசிகள் மற்றும் ஆன்மீக பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்காத கோவில் நிர்வாகம் திமுக கவுன்சிலர்கள், திமுக கட்சியினர், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர்களுக்கு எவ்வாறு அடையாள அட்டை தயார் செய்து வழங்குகிறார்கள் என்றும், இன்று இரவிற்குள் அனைத்தையும் மாற்றி நாளை காலை முதல் முறையான நபர்களுக்கு அடையாள அட்டை வழங்காத பட்சத்தில் பாஜக மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: