😱 2025 சபரிமலை புல்மேடு 🔥 | Pulmedu Sabarimala |Govarthanvlogs
Автор: பயணப்பித்தன் - Govarthanvlogs
Загружено: 2025-11-21
Просмотров: 35359
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இதேபோல் வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ஜீப், பஸ் வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. தூரம் வனப்பகுதியில் பாதயாத்திரையாக சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம்.
பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த 16ந் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்களும் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
1.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கிமீ
2.சத்திரத்தில் காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி
3.12 கிமீ கானகபாதையில் 6 வனத்துறை முகாம்கள்
4.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி
5.காலை 7 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே அனுமதி
6.இடையில் தங்கவசதி இல்லை
7.வனத்துறை சோதனை சாவடி மூன்றில் மருத்துவ முகாம்
8.உணவகம் உண்டு
9.அட்டை பூச்சிகள் அதிகம்
10.. சத்திரத்தில் Online booking வசதி உள்ளது
11.பிளாஸ்டிக் அனுமதி இல்லை
#2025 #sabarimalai #ayyapan #swamysaranam #kerala
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: