கண்ணை மூடி பத்து நிமிஷம் கேட்டால் கர்மா காணாது போகும். செல்வ நடராசா பாடல் Part 2 | who is nataraja
Автор: பொற்சபை நாதம் PORTSABAI NADAM
Загружено: 2025-09-19
Просмотров: 1154
Soul Inspiring Nataraja Song
Very powerful Tamil devotional song
#nataraj #natarajar #nataraja song #magudadheeban #who is nataraja #மகுடதீபன்
Lyrics / video editting / Production... Magudadheeban
Vocals & Music Vadalur MS Karthik
Keyboard arrangements and Rhythm...Hari Shankar Thiruvannamalai
Mixing & Mastering...Yuvan Hari shankar
மருந்தறியேன் மணியறியேன் என்ற வள்ளலார் திரு அருட்பாவின் அடி ஒற்றி எழுதப் பட்ட பாடல்
செல்வ நட ராசா – எங்கள்
சிற்ச பையின் வாசா
வல்வினைக்கும் நோய்க்கும் – நல்ல
மருந்து கிடைக்காதா?
அடிக்கமலம் என்கரத்துள் அகப் படுதல் என்று
அண்ணாந்து பார்த்தெழுந்து ஆடிடவோ மன்று
முடிக்கற்றை நான் அமரும் முன்றிலுக்குள் ஆடும்
முன்னேற வேண்டி நின் தாள் மு த்துப்பரல் பாடும்
உடுக்கைஒலி மனை முழுக்க ஓங்கரத்தை உதிர்க்கும்
உற்சாக அதிர் வலையில் உலகம் விதிர் விதிர்க்கும்
இடக்கரத்து சோதி பட இருட் கணங்கள் ஓடும்
ஏகப்பிர காசத்திலே ஏலஏலோப் போடும்
நொடிக்குள் மட்டும் நாம ம் – சொன்னால்
நூறுதினம் சே ம ம்
படிக்கவில்லை எனினும் – உன்மேல்
படரும் பிள்ளை நானே…………………………….. 7
படத்தரவுப் பாம்புகட்டும் பாலித்தருள் புரிவாய்
பாலகனை யா விடுவாய் பக்கலிலே இடுவாய்
இடத்துறையும் அம்மையுடன் என் உடலம் புகுவாய்
என்ன ஒன்றும் தேவை இல்லை இவ்வுலகில் வெகுவாய்
மடத்துறையும் சிறியனுக்குன் மதி கொடுக்க வேணும்
மதி வழியும் அமுத த்தில் இம் மரம் நனைய வேணும்
தடத்துறைய வந்தவற்குன் தரி சனங்கள் தரணும்
தரவிலையேல் தாளுகிலேன் சரிசமத்தில் இடணும்
நடத் தரையன் நாம ம் – சொன்னால்
நாட்டுக் கெல்லாம் சேம ம்.
படைத்து வைத்த பிள்ளை-– அன்புப்
பஞ்சம் இலாப் பிள்ளை…………………………………… 8
பஞ்செனவே பறக்கும் வந்த பாவ வினைப் பேய்கள்
பட்டெனவே மூடும் வாது பலவுரைத்த வாய்கள்
துஞ்செனவே தூங்கிற தூக்கம் மட்டும் இல்லை
தொடர்ந்து வரும் கூற்றெனுமோர் துர் மரணம் இல்லை
நஞ்சணிந்த கண்டன் உண்டு நமக்கெனவோ கவலை
நாடோறும் தெளிக்க கங்கை நதி இருக்கு திவலை
செஞ்சடையன் அருள் இருக்கத் தேவை என்ன வேறு
செகம் முழுக்க நமக்கலவோ சேவைசெயு மாறு
அஞ்செழுத்துன் நா ம ம் – சொன்னால்
ஆயுசுக்கும் சேம ம்
எஞ்சி உள்ள காலம் – உன்னை
எண்ணும் பிள்ளை நானே……………………….. 9
எண் படைத்த காரணம்யான் என்றும் உனை எண்ண
ஏன்ற வரை பேசுக வாய் ஏழிசைகள் பண்ண
கண் படைத்த காரணம் உன் காட்சிமட்டும் காண
காட்டிஅதில் மூழ்கடித்துன் கனல்வடிவம் பூண
மண்படைத்த காரணம் யான் மக்குதற்கும் இல்லை
மறலியினை செயிப்பதற்கு வக்கெனக்கா இல்லை?
விண்படைத்த காரணம்யான் விரிந்து அது போல் மாற
விருத்தமடை யாமல் உன்மேல் விருத்தம் எல்லாம் பாட
எண்ணி எண்ணி நாம ம் -சொன்னால்
எப்பவுமே சேம ம்
தெண்டன் இட்டு உனையே – கண்ணீர்
சிந்தும் பிள்ளை நானே…………………………………… 10
சிந்தை மட்டும் உன்னை எண்ணித் செபதபங்கள் செய்யும்
சிரங்குனிந்து அப்பன் தரக் தீ ங்கவிதை பெய்யும்
வந்திருந்த கணம் முதலாய் மணத்தில் அன்றோ வாழும்
வரவிலையேல் வானவனே வருத்தமதில் ஆழும்
தந்த வரம் தனை மறந்துஏன் தலைவன் திரிகின்றாய் ?
தலைச்சன்பிள்ளை யை எந்தத் தடத்தில் பதிக்கின்றாய்
சந்த தமும் நீ இருக்கும் சகவாசம் போதும்
சகத்தினிலே வேறு இனிஎச் சம்பந்தங்கள் வேணும்?
நந்தி மகன் நாம ம் – சொன்னால்
நாள் முழுக்கச் சேம ம்-
கொந்தளித்த பிள்ளை - உன்மேல்
கோவப் பட்ட பிள்ளை…………………………………….. 11
கோவிலுக்கு மடுக்கிறதோ குரல் விடுக்கும் கீதம்
குரம்பையிலே ஆடுதல் நீ குழைத்து வைத்த நாதம்
ஆவிபட படக்கிறது ஐயன் வருவாயோ
ஆசி சொலத் தான் மலரும் அமுதத் திரு வாயோ?
தூவலுக்குக் காத்திருந்தால் தொடரும் அருள் மாரி
தொட்டுடலம் பட்டுவிட்டால் தொலையும் வினை மாறி
ஏவலுக்குப் பார்த்திருந்தேன் இட்ட பணி ஏது
இட்டமுடன் நீயிருந்தும் இவ்வளவேன் வாது
நாவில் உந்தன் நாம ம் – சொன்னால்
நடப்ப தெல்லாம் சேம ம்
தேவி வரும் வாசம் – எங்கள்
தென்ன ன் புகழ் பேசும் -………………. 12
தென் திசையை நோக்கிஅப்பன் தினம் நடிக்கும் ஆட்டம்
செல்லப்பிள்ளை நான்இருக்கும் திசையில் அன்றோநோட்டம் மன்பதைக்குள் நின் சுவட்டை மார்க்கம் எனத் தொடர்ந்தேன்
மாச்சரியம் ஆச்சாரம் மட்டும் மனம் மறந்தேன்
உன் மணமோ கற்பூரம் உற்றறிந்த சிறியேன் -
உண்ணுகிற உணவின் மணம் ஒரு பொழுதும் அறியேன்
சென்மம் ரெண்டும் தொடர்ந்து வந்தேன் சிக்கெனவே பிடித்தேன்
சேர்த்தணைத்துக் கொண்ட பதம் சிந்தை மறந் தறியேன்
அறிவு தரும் நாம ம் – சொன்னால்
ஆயு சுக்கும் சேம ம்
அறி வறியாச் சிறியேன் – உனைவிட்டு
ஆரிட த்தில் செல்வேன் …………………………….. 13
செல்வ நட ராசா – எங்கள்
சிற்ச பையின் வாசா
வல்வினைக்கும் நோய்க்கும் – நல்ல
மருந்து கிடைக்காதா?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: