பள்ளபட்டியில் சமய நல்லிணக்கமும், சமூக நல்லிணக்கமும் பேணிக் காக்கும் இஸ்லாமிய சமூக மக்கள்
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-05-27
Просмотров: 42
கரூர் பள்ளபட்டிக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்காகச் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட முப்பத்து இரண்டாயிரம் பேர் வசிக்கும் ஊரில் ஒரு டாஸ்டார்க் கூட இல்லை. அது மட்டுமல்லாமல் சேட்டு, மார்வாடி கடைகள் எதுவும் இல்லை,
இது மட்டுமல்லாமல் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருந்தாலும், ஒரு கிறித்துவ தேவாலயமும், மாலமாரியம்மன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு இந்துக்கள் குறைந்த அளவே இருந்தாலும், மற்ற இஸ்லாமிய பொதுமக்களும் இந்தத் திருவிழாவில் முழுமையாகப் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
பதினைந்து நாள் நோன்பு சாட்டு திருவிழாவில் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். முத்து வாத்தியார் எனும் ஒரு சில குடும்பத்தினரே இருந்தாலும். இந்தக் கோயில் நோன்பு சாட்டி தொடங்கி முடியும் வரை அனைத்துப் பணிகளிலும் உடனிருந்து ஒத்துழைப்பு நல்குவதாகக் கூறுகின்றனர்.
மேலும். பள்ளபட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்த இடத்தில் டாஸ்மார்க் கடை இல்லை. நகராட்சியின் முதல் வார்டு மண் மாரி எனும் பகுதியில் இருக்கும் ஒரு சில இந்துக்களே இருந்தாலும் அவர்களுக்கென ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பள்ளபட்டியின் நகராட்சியின் முதல் வார்டாக முன்னுரிமை கொடுத்து இங்கிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். ஒரு வார்டுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வாக்குகள் இருந்தாலும் இந்தப்பகுதியில் அதைவிடக் குறைந்த அளவே இருந்தாலும் அவர்களுக்கென ஒரு வார்டை ஒதுக்கி நகரமன்ற உறுப்பினராக்கி சமூக சமத்துவத்தையம், சமூக நீதியையும் காத்து வருகின்றனர் என்றால் மிகையில்லை.
நகர் மன்றத்தலைவர், வணிகர் சங்கத் தலைவர், அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் மனித நேய உள்ளத்தோடு உண்மையான சமூக அரசியலை முன்னெடுக்கின்றனர்.
கிறித்துவ மக்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது கிறிஸ்துமஸ் திருவிழாவில் இஸ்லாமிய சமூக மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருவதும் கூடுதல் சிறப்பு.
இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 32 ஆயிரம் ஒரே ஒரு வாக்கு தாமரை கட்சிக்கு விழுந்துள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: