ஆதலினால் காதலுறாதீர் ( REVENGE )
Автор: PENAAPPERUMOOCHU
Загружено: 2025-11-03
Просмотров: 371
90'S Mentality. revenge.
வரிகள் (வலிகள்)
உன் காலடியில் எந்தன் காலமடி
உன் முழுவடிவே என்னில் மோட்சமடி.
மோட்சமடி.
நீ ஓரடி எடுத்து நெருங்கையிலே
உள்வாங்குது வாங்குது இதயமடி!
உன் அலையடித்தால்
அந்த கிறக்கத்திலே
உயிர் மூழ்குதடி உயிர் மூழ்குதடி!
(யா எ)
ஈரடி கொண்டாய் இதழ்களிலே
உன் இதழ்களுக்கடியில்
எந்தன் இனிப்புப் புதையலடி.
(ம் ஹ்ம்)
மூண்டதடி காதல்
என் முழு பிறவிக்கும்,
தீ மூட்டிப்போனது -
நீ சின்ன சின்னதாய்
கொளுத்திப் போட்ட
உன் சிரிப்புத் திரிகளடி.
(ந நா)
நான் கடித்தால்
நிலவு கசக்குதடி
காரணம் ஒன்றுதான்..
தனிமைக் காய்ச்சலடி
தனிமைக் காய்ச்சலடி!
(யே ஹே)
ஐந்தடித் தாமரையே
நீ யாரடி என் தேவதையே!
பிறவிகள் மொத்தம் ஏழடி
அங்கும் நீயின்றி
நான் பிறப்பதும் வீணடி.
வீணடி.
புரிந்து கொள்ள முடியாத
பார்வைகள் வீசி வீசியே
என்னைப் பித்தனாக்கிய
பெண்மையே!
என் சிற்றறிவிற்குள்
எப்படியாவது வந்து எட்டடி.
எட்டடி.
மண்ணில் புதைவதற்கென்றே
பிறவியெடுத்து வந்த
அற்ப உடலுக்கு த்வாரங்கள் மொத்தம் ஒன்பதடி.
உன்னில் புதைவதற்கென்றே பிறந்து
உன் நினைவுகளால்
பத்தாவது த்வாரமாய் பிளந்த
இதயம் என்பது
உன் இளமை உண்பதடி.
(பப பப்ப பா)
பற்றுதல் உள்ள பற்றினை மறைத்து
பற்றிலாள் போல் விலகும்
பெண்ணே!
உன் நினைவுகளின் சிதையில்
பற்றி நான் சாம்பாலாய்ப் பறக்கும் முன்னே
வந்து கைப்பற்றடி காதலை.
வந்து காதலை கைப்பற்றடி..
(ஹ்ம். ஹ்ம்)
.உள்ளம் என்று ஏதோ ஒன்று
உள்ளதடி
அதில் நீ உள்ளதினாலேயே
அது கிடந்து துள்ளுதடி
தானன நா)
நஞ்சாமிர்தக் கலவையே
உன் கண்களடி
என் நெஞ்சாமிர்தக்
கவலையே
என் காதலடி..
(ந நா)
நினைவுகளில் உன்னோடு அடிதடி
கலவரம் செய்யும் என் காதலுக்கு
மீண்டும் மீண்டும்
உன் கண்களால் தடியடி..
தடியடி.
(யே யே)
இந்தக் காதல் என்பது
மழை வரும் இனிய மாலைப்பொழுதடி
கவனமில்லா
உன் இளமையில் ஏதோ பழுதடி.!
இளம் மயிலே - உன்
பழுதுள்ள இளமையை
கவனிக்கச் சொல்லும்
இனிய மழை மாலைப் பொழுதுதான்
இந்தக் காதலடி!
இந்தக் காதலடி!
(ஆமாம்)
அடி முதல் முடி தொடும் முடிவிற்கு
முனிவின்றிப் பிடி கொடு
பெண்மயிலே
பெண்மயிலே.
ஓர் பிடிவாத
முடிவோடு
நீ நொறுக்கிய இதயத்திற்கு
இளைப்பாற மடி கொடாவிடில்
இனியும் உன்னிடம்
பெண்மையில்லை
பெண்மையில்லை.
(னன நன்நனா)
பெண் மயிலே உன்னிடம்
கொஞ்சம் உண்மையில்லை
தோகை விரித்தழைக்குது
ஆண் காதல்-
கொஞ்சிட வா உன் மயிலை.
(தய தய)
இதய இலையில் பாரமடி
அதை உணர முடியாவிடில்
உன்னிடம் இதயமே இல்லையடி.
இல்லையடி.
உன் விழிகளே தொப்புள்கொடியாய்
அதன் வழியே
வீணேயென் காதலை வளர்ப்பதை
ஒப்புக்கொள்ளடி
கொள்ளடி.
ஒத்துக்கொள்ளடி
உன் சொற்படி
கேட்டுப் பிரிவதானால்
உயிரே,
வெறும் உடல் இங்கு
வாழ்வது எப்படி
(ம்ஹ்ம் )
பிரபஞ்ச விதிகளின் படி
அது தப்படி!
தப்படி!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: