புனித அந்தோணியார் முடிசூட்டு விழா | St Anthony Feast Day | St Antony's Church Maduravoyal
Автор: MarGeo
Загружено: 2024-06-14
Просмотров: 239
💖முடிசூட்டு விழா கவிதை💖
புன்னகை பூத்த புதல்வனாய் வந்த
விண்ணக வேந்தனை வியப்புடன் கண்டு
மண்ணக மாந்தர் மனங்கள் மகிழ்ந்திட
தன்னகம் அணைத்து தந்தையான புனிதரே வாழ்க
திருநாள் அன்று திரளாய் வந்தவரில்
அருள்வாய் என்று அண்டிய ஒருவர்
இருகரம் கூப்பி லீலிமலர் வைக்க
இருமலர் பூக்க புதுமை செய்தவரே வாழ்க
வேலை செய்தவர் வேலியின்றி தவறிவிழ
கீழே நின்று நில்லென்ற உம் சொல்லால்
மேலே மிதந்திட மாட்சிமை புரிந்த
ஏழையை காத்திட்ட எழில் நாயகரே வாழ்க
எல்லை இல்லா ஏசுவின் மாண்பை
இல்லை என்ற பதிதனுக்கு உணர்த்த
புல்லை கூட புசியாமல் கழுதை - உம்
சொல்லை கேட்டு நற்கருணை தொழுதது வாழ்க
பரந்து விரிந்த ரிமினி கடற்கரையில்
திறந்த மனமுடைய திரளான மீன்களுக்கு
சிறந்த முறையில் போதனைகள் புரிந்து
சுரந்த அருளை சுரமாய் அளித்தவரே வாழ்க
வஞ்சம் கொண்டோர் அழைத்த விருந்தில்
தஞ்சம் கொண்டு சிலுவை வரைய
நெஞ்சம் நிறைவோடு நஞ்சை உண்டும்
கொஞ்சம் கூட கொடுமையின்றி எழுந்தவரே வாழ்க
மடி ஏந்தி மன்றாடிய மாந்தர் யாவருக்கும்
விடி வெள்ளி போன்று விடியலை தந்து
நொடி பொழுதில் அற்புதம் புரியும்
கோடி அற்புதர் நம் அந்தோணியாருக்கு
முடி சூட்டி மகிழும் இந்நாளில் நாம்
முழு சுகம் பெற மன்றாடிடுவோம்!
கோடி அற்புதரான புனித அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: