சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை
Автор: நினைவெல்லாம் நீ - சிவலயம்_சிவன் பாடல்கள்
Загружено: 2026-01-08
Просмотров: 178
பன்னிரு திருமுறைகள் -நான்காம்நாள்.
1ஆம் திருமுறை.
நன்றுஉடையானைத் தீயதுஇலானை நரைவெள்ளேறு
ஒன்றுஉடையானைஉமைஒருபாகம் உடையானைச்சென்று அடையாத திரு உடையானைச் சீராப் பள்ளிக்
குன்றுஉடையானைக் கூற என் உள்ளம் குளிரும் மே.
2ஆம் திருமுறை.
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரிநல்வினை பயனிடை முழுமணித்தரளங்கள்
மன்னுகாவிரி சூழ்திருவலம் சுழி வாணனைவாயாரப்
பன்னிஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.
3ஆம் திருமுறை.
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாள் மலர்வார்மது ஒப்பது
செம்பொன் ஆர்திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
4ஆம் திருமுறை.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள்
இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.
5ஆம் திருமுறை
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறிவிச்சையும்
நமச்சிவாயவே நா நவின்றுஏத்துமே
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.
6ஆம் திருமுறை.
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை அறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாமலைமத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டுஆன அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரம்எரியநக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோல்உரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
7ஆம் திருமுறை.
பொன்னார்மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னேமாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
8ஆம் திருமுறை.
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆம் இணைஅடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புுண்டரிகம்
போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர் கள்
போற்றி யாம்மார்கழி நீர் ஆடுஏல்ஓர் எம்பாவாய்
9ஆம்திருமுறை
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே
அன்பொடு தன்னைஅஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளும்
தொண்டருக்கு எண்டிசைகனகம்
பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும்
பவளவாயவர்பணைமுலை.யும்
கற்பகப் பொழிலும் முழுதுமாய் கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே.
திருப்பல்லாண்டு
ஆர் ஆர் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து
பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே
10ஆம் திருமுறை
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே.
11ஆம் திருமுறை
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனிபொலிந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடைதன்னைக்கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே
12ஆம் திருமுறை
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்இன்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: