ஊட்டமேற்றிய ஆட்டு உரம் தயாரிப்பு முறை.
Автор: Magizham Organic Talkies
Загружено: 2023-09-08
Просмотров: 65
அனைவருக்கும் வணக்கம்ங்க நண்பர்களே,
நேற்று மதியம் வரை வானம் மப்பும் மந்தாரமா இருந்தது. மேற்கிருந்து கிழக்கே கருக்கல் உருண்டோடிட்டு இருக்கு, ஆனா மழை துளி விழுந்த பாடில்லை.
நாலரை மணிக்கு மேல ஒரு மிதமான மழை.😍
எப்படி இருந்தாலும் மழை தூத்தல் இன்னும் ஒரு மாசத்துக்கு அப்பப்ப கிடைக்கும்னு வானிலை அறிக்கை சொல்லுதுங்க. இப்ப மஞ்சள் காட்டிற்கு உரம் வெச்சு கொடுக்கிற நேரம்ங்க , அதனால நேற்று காலையில் ஆட்டாம்புழுக்கை, மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்குனு மூனையும் கலந்துவிட்டு அதுக்கு மேல ஜீவாமிர்தம் தெளிச்சு மூடி வெச்சிருக்கோம்.
பயிர்கள் சத்துக்களை கிரகித்து கொள்ள ஏதுவாய் உரங்கள் மக்கி கிடைக்க கால அவகாசம் தேவைங்க. அதனால தான்..
மாட்டு சாணம் அந்த வருசத்துக்கு, ஆட்டு உரம் அடுத்த வருசத்துக்குனு சொன்னாங்க.
நாம சொன்ன முறையில் ஆட்டாம்புழுக்கையை கையாளும் போது அந்த வருசத்துக்கே உரமா மாறி கிடைக்கும்.
இன்னும் பத்து நாள்ல ஆட்டாம் புழுக்கைககள் நல்லா சூட்டில் புழுங்கி பொடியாகி விடும். அதற்கு அப்புறமா பயிர்களுக்கு உரமா கொடுக்கும் போது சத்துக்கள் உடனே பயிர்களால கிரகித்து கொள்ள முடியும்ங்க.
மாற்றம் என்பது சொல் அல்ல.. செயல்.
அதை தான் நாம் செய்து வருகிறோம். 😊
நன்றி,
மகிழம் இயற்கை வேளாண் பண்ணை
ஒழல்பதி கிராமம்
கிணத்துக்கடவு மேற்கு
கோயமுத்தூர் மாவட்டம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: