உலகமே சாயி | Ulagame Sayi | Shirdi Sai Baba Song with Lyrics | Popular Sai Ram Song | Anush Audio
Автор: Anush Audio
Загружено: 2021-07-14
Просмотров: 381096
Song : Ulagame Sayi - Tamil Lyrics
Singer : Vedavinayak
Lyrics : Nanjilrajan
Music : V Kishorkumar
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasongs#sairamsongs#anushaudio
பாடல் : உலகமே சாயி - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேதவினாயக்
கவியாக்கம் : நாஞ்சில்ராஜன்
இசை : வே கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
உலகமே சாயி உயிர்கள் இயக்கமே சாயி
உருவமில்லாத ஆன்மா உலவி உனதடி சேரும்
அண்டம் முழுதும் ஆள்பவன் சாயி
ஆதியும் அந்தமும் சாயி பாபா நீயே
சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
ஜெய ஜெய சாயி நீயே துவாரகமாயி
சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
ஜெய ஜெய சாயி நீயே துவாரகாமாயி
சாயி மஹா சாயி . . . சாயி ராம்
ஓம் ஸ்ரீ சாயி . . . சாயிசா
ஜெய ஜெய சாயி நீயே சற்குருசாயி
சாயி உந்தன் சீரடி தேடி வருவோர்க்கு
தீர்ந்துவிடும் தேவை யாவும் உனதருள் பார்வையில்
சாதுவடிவாகி வீற்றிருக்கும் சாயி
பூமியில் என்றென்றும் வாழுகின்ற யோகி
சாயி உன்னை பார்த்தால். . . சாயி ராம்
சோதனைகள் தீரும் . . . சாயிசா
சாயி உந்தன் நாமம் பாட சாதனைகள் சேரும்
சாயி குரு பாபா . . . சாயி பரமேசா
சாயி நீயே வீர அனுமான் நாளும் துணை நீயே
சாயி உந்தன் பாதத்தில் சரணடைந்தோமே
ஜென்மவினையாவும் போக்கி
நல்ல வழி காட்டுவாய்
காரிருள் நீக்கும் காந்த ஒளி நீயே
காலமெல்லாம் காத்து அருளும் கடவுளும் நீயே
சூட்சுமம் ஆனதுந்தன் . . . சாயி ராம்
அவதாரம் தானே . . . சாயிசா
பக்தர்களைக் காக்க வந்த பரம் பொருள் நீயே
சாயி நீயே வானம் சாயி நீயே பூமி
சாயி நீயே தாகம் தீர்க்கும் நீர் ஊற்று
சாயி உந்தன் பார்வை ஒளியூட்டும் வாழ்வை
சாயி உந்தன் பாதை எமக்கு வழிகாட்டும் நேர்மை
சாயி உந்தன் நாமத்தில் . . . சாயி ராம்
மூழ்கியெழுவோமே . . . சாயிசா
முக்தியெனும் பிரம்மம் தந்து முன்வினை தீர்ப்பாய்
சாயி உந்தன் பேரருள் கோடிப்பூக்கள் வாசம்
சாயி உந்தம் பாச மொழிகள் சந்தனத்தை வீசும்
மூட மனம் மாற்றி முக்தி தரும் சாயி
மூவுலகை ஆளுகின்ற மூலவரே சாயி
நீர்க்குமிழி போல . . . சாயி ராம்
மாயமான தேகம் . . . சாயிசா
நீயதனை தாங்கிக் காப்பாய் நிலமதைப் போல
சாயி உந்தன் போதனை ஆற்றிவிடும் நோயினை
சாயி உந்தன் தோரணையில் தோற்றுவிடும் வேதனை
சாயி எங்கள் வாழ்வில் தீபவிளக்கேற்று
கர்மவினை தீர நீயே நல்லவழி காட்டு
சாயி உந்தன் உதியாலே . . . சாயி ராம்
ஊனங்களை நீக்கு . . . சாயிசா
சாயி உந்தன் விழியாலே ஞானத்தினை ஊட்டு
சாயி நீயே ராமன் சாயி நீயே கிருஷ்ணன்
சாயி நீயே இயேசு அல்லாஹ் சாயிதத்தாத்ரேயா
சாதி மத பேதங்கள் ஏதுமில்லா ஜோதி
சாயி நீயே கதி என்போர் சந்தோசம்தான் அடைவார்
சாயி எங்கள் தேகம் . . . சாயி ராம்
கர்ம விளைவாகவும் . . . சாயிசா
சாயி உந்தன் ஜீவன் என்றும் சக்தியாகி காக்கும்
சாயி சச்சிதானந்தம் சாயி பரமானந்தம்
சாயி நீயே சற்குருநாதன் சாயி பலயோகி
ஞான ஒளியாக காட்சிதரும் சாயி
நானிருக்க பயமேனென கேட்டருளும் சாயி
சாயி ஜகம் காக்கும் . . . சாயி ராம்
ஜகத்ரட்சகன் தான் . . . சாயிசா
யுகம் யுகம் தோறும் போற்றிடும் யோகி
சாயி உந்தன் லீலைகள் காண வரம் வேண்டும்
சாயி உந்தன் கீர்த்தனைகள் நாளும் பாட வேண்டும்
வான மழை போல வையகத்தை நீயும்
வாழவைக்க வந்ததால் அருள் வள்ளலாக நின்றாய்
வாழும் உயிர்க்கெல்லாம் . . . சாயி ராம்
வான் நிலவு நீயே . . . சாயிசா
வண்ண வண்ண பூக்கள் தூவி வாழ்த்திப் பாடுவோம் உனை
சாயி நீயே நாதம் சாயி நீயே கீதம்
சாயி நீயே நாலு வேதம் வாழ நெறி கூறும்
சாயி உந்தன் பாதம் ஒன்றே எங்கள் கமலாலயம்
சாயி உந்தன் கோவில் என்றும் எங்கள் சரணாலயம்
சாயி உந்தன் ரூபம் . . . சாயி ராம்
உயிருக்குள் வாழும் . . . சாயிசா
சாயி உந்தன் சக்தி தானே உலகத்தை ஆளும்
சாயி உந்தன் வாக்குகள் பொய்யாய்ப் போனதில்லையே
சாயி உன்னை நம்பினோர்க்கு சங்கடங்கள் இல்லையே
சாயி உந்தன் பேரைக் கூட உச்சரித்தால் போதும்
பறந்தோடும் பாவமெல்லாம் பனிபோல நாளும்
சாயி உந்தன் வாசல் . . . சாயி ராம்
சஞ்சலத்தை போக்கும் . . . சாயிசா
சாயி உந்தன் வார்த்தைகள் வல்லமையை சேர்க்கும்
சாயி பக்தர் பாரத்தை தங்கி நிற்கும் ஏணி
தீமை என்றும் தீண்டிடாமல் போட்டிடுவார் வேலி
கோதுமையைத் தூவி காலராவை ஒழித்தார்
தேள் கடித்த விஷத்தைக் கூட உதியாலே தீர்த்தார்
சாயி உன்னை போற்றி . . . சாயி ராம்
பாடும் வரம் வேண்டும் . . . சாயிசா
சாயி உந்தன் பாதை மேலே வாழ வரம் வேண்டும்
காரிருள் மாயையை நீக்க வந்த சாயி
காருண்யமூர்த்தியான கலியுக அவதாரி
கோதாவரி நதியோரம் கோவில் கொண்ட சாயி
கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு வேண்டும் வரம் தரும் சாயி
வாடாமலர் சூடி . . . சாயி ராம்
வானவர்கள் போற்றும் . . . சாயிசா
கோடானுகோடி நெஞ்சில் வாழுகின்ற யோகி
ஆபத்தில் நம்மைக் காக்கும் அற்புதமே சாயி
அஞ்ஞான இருள் அகற்றும் மெய்ஞ்ஞானம் சாயி
ஐஸ்வர்யம் தருகின்ற ஐங்கரன் சாயி
அச்சத்தை போக்குகின்ற ஐயப்பனே சாயி
சத்யரூபமான . . . சாயி ராம்
சாயி மகராஜன் நீயே . . . சாயிசா
நித்யநிலையாகி மன நிம்மதி தரும் சாயி
சாயி எங்கள் தாயும் தந்தையும் நீயே
சாயி நீயே தோழனாக தோள்கொடுப்பாயே
சாயி எங்கள் மூச்சில் கலந்தவர் நீயே
சாயி எங்கும் காற்றாக நிறைந்தவர் நீயே
அணுவிலும் சாயி . . . சாயி ராம்
அசைவிலும் சாயி . . . சாயிசா
அனைத்திலும் ஆதாரமாய் திகழ்பவர் சாயி
பொறுமையும் சாயி நம்பிக்கையும் சாயி
கருணையும் சாயி நம் கடமையும் சாயி
திறமையும் சாயி புலமையும் சாயி
வறுமையில்லாமல் தினம் காப்பவர் சாயி
மாணிக்கம் வைரம் . . . சாயி ராம்
மரகதம் சாயி . . . சாயிசா
கோமேதகம் சாயி பவளமும் சாயி
சாயி உந்தன் மேனியை சால்வைகளால் போர்த்தி
வாசம் தரும் பூக்களாலே மாலையாக்கி சூட்டுவோம்
ஆசையெனும் தீயினை அணைத்திடு சாயி
பாசமழை தூறலில் தினம் நனைத்திடு சாயி
சாயி மலர் பாதம் . . . சாயி ராம்
பற்றிடுவோம் நாளும் . . . சாயிசா
சாயி அருள் பார்வை என்றும் பெற்றிடுவோம் நாமும்
Check Out our Other Channel 'Anush Music' - http://bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: