மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்திய விரல் மையில் தரமில்லை என ராகுல் குற்றச்சாட்டு Rahul
Автор: Dinamalar
Загружено: 2026-01-16
Просмотров: 8385
#Partnership மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. மும்பை உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
காலை முதலே, பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா ஆகியவை பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.
குறிப்பாக, மும்பை மாநகராட்சியில், இதுவரை இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் ஆதிக்கம் இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 277 இடங்களில், பாஜ 98 இடங்களில் முன்னிலை பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனா 30 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பாஜ கூட்டணி கைப்பற்றியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்த மும்பை மாநகராட்சி இம்முறை அவர்களின் கையில் இருந்து விடுபட்டுள்ளது.
உத்தவ் தலைமையிலான சிவசேனா 60 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்த தேர்தலில் வெறும் 7 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
மும்பை மட்டுமின்றி, புணே, பிம்ப்ரி, கோலாப்பூர், சோலாப்பூர், நாக்பூர் என பெரும்பாலான மாநகராட்சிகளின் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.
மாநில அரசில் பாஜவுடன் கூட்டணி வைத்து துணை முதல்வராக உள்ள அஜித் பவார், புணே, பிம்பிரி மாநகராட்சிகளில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.# #Rahul| #Maharashtraelectionresults| Maharashtracorporationresult| #BMCelection|
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: