Oru Pennin Kathai - Title Song
Автор: AVM Productions - Serials
Загружено: 2013-04-09
Просмотров: 147887
பாடல் : வைரமுத்து
இசை : சந்திரபோஸ்
பாடியவர் : உன்னிமேனன்
கதை... பெண்ணின் கதை... ஒரு பெண்ணின் கதை...
தன்னைத்தானே... ஊன்றிஎழுந்த...
விண்ணைத் தொடுபவள் கதை...
உயிரை எல்லாம்... கண்ணில் தேக்கி...
உற்றுப்பாருங்கள் இதை...
இது வாழ்வை பிழிந்தக் கதை...
ஒடி வந்து பாருங்கள் இதை...
கதை... பெண்ணின் கதை... ஒரு பெண்ணின் கதை...
பெண்களைக் கொடிகள் என்றீர்கள்...
காற்றில் ஓடிந்து... போவதற்கா...
பெண்களை நிலவுகள் என்றிர்கள்...
நடந்து நடந்து... தேய்வதற்கா...
பெண்களை தெய்வம் என்றீர்கள்...
சூடம் காட்டி... அணைப்பதற்கா...
பெண்களை கிளிகள் என்றீர்கள்...
ஆண்கள் சொல்வதை... சொல்வதற்கா...
கொடியாய்...நிலவாய்...தெய்வம்...கிளியாய்...
பெண்ணைப் பார்ப்பதை மாற்றுங்கள்...
பெண்ணை பெண்ணாய்... பாருங்கள்...
அவள் போகும் வழியில் பூக்கள் வேண்டாம்...
முள்ளை இறைப்பதை... நிறுத்துங்கள்...
கதை... பெண்ணின் கதை... ஒரு பெண்ணின் கதை...
மண்ணில் மனிதர் தொடர்ச்சிக்கு பின்னே
தன்னுயிரை அவள் விட்டு வைத்தாள்...
கயிற்றுத் தொட்டிலை கட்டும் முன்னே...
வயிற்றுத் தொட்டிலை கட்டி வைத்தாள்...
குடும்பம் காய்க்கும் மரமாக...
தன்னைத் தானே நட்டு வைத்தாள்...
கடமை செய்தும், உரிமைகளை...
வேண்டாம் என்று விட்டு வைத்தாள்...
பணிந்து... குழைந்து... குனிந்து... நெளிந்து...
வளைந்த பெண்ணே...நிமிர்ந்து விடு நீ...
வானையும் மண்ணையும்... அளந்து விடு...
வளையலை கொஞ்சம் கழற்றி வைத்து...
வாளைக் கையில்... எடுத்து விடு...
கதை... பெண்ணின் கதை... ஒரு பெண்ணின் கதை...
தன்னைத்தானே... ஊன்றி எழுந்த...
விண்ணைத் தொடுபவள் கதை...
உயிரை எல்லாம்... கண்ணில் தேக்கி...
உற்றுப்பாருங்கள் இதை...
இது வாழ்வை பிழிந்தக் கதை...
ஓடி வந்து பாருங்கள் இதை...
கதை... பெண்ணின் கதை... ஒரு பெண்ணின் கதை...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: