தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி | நெல்லை மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள்
Автор: Tamilaga Vettri Kazhagam
Загружено: 2023-12-23
Просмотров: 15412
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,
கடந்த திங்கட்கிழமை (18/12/23) அன்று,
• #நெல்லை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை தொகுதி 2-வது வார்டு, #சிந்துபூந்துதுறை பகுதியில் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக படகு மூலம் சென்று பொதுமக்களுக்கு பால், தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கி மேலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அனைவரும் ஒன்று கூடி வெள்ளத்தால் மாட்டிக்கொண்டவர்களையும் மீட்டனர்.
அதனை தொடர்ந்து 20/12/23 புதன்கிழமை அன்று,
• #தூத்துக்குடி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட #பாத்திமாநகர் வாழ் மக்கள் பகுதிக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்கள் நேரில் சென்று, அப்பகுதியை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவைகளும் மற்றும் உணவு & தண்ணீர் பாட்டில்களும்,
• #நெல்லை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கனமழையால் பாதிக்கப்பட்ட #பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட #வண்ணாரப்பேட்டை பகுதிக்கு நேரில் சென்று, அப்பகுதியை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி பைகளும் மற்றும் உணவு, ரொட்டி & தண்ணீர் பாட்டில்களும்,
• #நெல்லை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக #நெல்லைடவுன், பெரியதெரு பகுதியில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த இரண்டு வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடுப்பு, காய்கறிகள் மற்றும் 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களும்,
• #நெல்லை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு, #உடையார்பட்டி பகுதிக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பைகள் & போர்வைகளும் மற்றும் உணவு, பிஸ்கட் & தண்ணீர் பாட்டில்களும்,
• #நெல்லை மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு #நெல்லை தொகுதிக்குட்பட்ட #சிந்துபூந்துறை பகுதிக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பால், தண்ணீர் பாட்டில்களும் மற்றும் உணவு ஆகியவற்றை அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளிலும் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீட்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.!
"கைகோர்ப்போம் துயர்துடைப்போம்..”
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIThoothukudi #TVMINellai #TVMIYouTube #TuticorinRains #NellaiRains #ThoothukudiRains #SouthTNRains #TNRains #ReliefMaterials #LEO #Thalapathy68
Follow Us On:
X/Twitter ➡️ / tvmioffl
Instagram ➡️ / tvmioffl
Facebook ➡️ https://www.facebook.com/profile.php?...
Website ➡️ https://www.tvmioffl.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: