TPM TAMIL SONG509 | நித்திய காலமாய் எந்தன் தேவனும் | Nithya kaalamaai endhan Dheivanum Neeray
Автор: Samuel Sam
Загружено: 2022-12-25
Просмотров: 10521
#tpmtamilsong
சரணங்கள்
1. நித்திய காலமாய் எந்தன் தேவனும் நீரே
நீடுழியாய் அடைக்கலமானவர் நீரே
உந்தன் மாறா கிருபையை நிதம் நினைந்தே
உள்ளம் கனிந்தும்மைத் துதிப்பேன்
பல்லவி
என் வெளிச்சமும் இரட்சிப்பும் நீரே
எந்தன் ஜீவனின் பெலனும் நீரே
இரக்கமும் கிருபையும் நிறைந்த என் இயேசுவே
இன்றும் என்றும்மைத் துதிப்பேன்
2. தேவனே என் இருள் யாவும் அகற்றிடவே
தேவரீர் என் விளக்கதை ஏற்றினீரன்றோ!
இரட்சண்யமாம் கேடகமும் எனக்களித்தே
காருண்யத்தால் உயர்த்தினீரே — என்
3. எண்ணெயால் என் சிரசையும் அபிஷேகித்தே
எந்தன் பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்
சத்துருவின் வல்லமைகள் முறிந்திடவே
பந்தியொன்றை ஆயத்தம் செய்தீர் — என்
4. பரிசுத்தனாக யானும் மாறிடவே
பரிவோடு அழைத்தீர் உம் சித்தப்படியே
பரிசுத்தமதையே பயத்துடன் யான்
நிறைவேற்ற தயை செய்குவீர் — என்
5. விழித்தெழும்புவோம் நாம் நித்திரை விட்டு
வேகம் நெருங்குதே நம் இரட்சிப்பும் இதோ
பரிசுத்தர் இயேசுவையே சந்தித்திடவே
பயபக்தியுடன் சேவிப்போம் -- என்
1. Nithya kaalamaai endhan Dheivanum Neeray
Needooliyaai adaikalam aanavar Neeray
Undhan maaraa kirubaiyai nidham ninaindhay
Ullam kanindhummai thudhipein
En velichamum ratchipum Neeray
Endhan jeevanin belanum Neeray
Irakkamum kirubaiyum niraindha en Yeisuvay!
Indrum endrummai thudhipein
2. Dheivanay en irul yaavum agatridavay
Dheivareer en vilakkadhai yeitrineer andro!
Ratchanyamaam keidagamun enakalithay
Kaarunyathaal uyarthineeray
3. Ennaiyaal en sirasaiyum abisheigithay
Endhan paathiram nirambi valiya cheidheer
Sathuruvin vallamaigal murindhidavay
Pandhi-yondrai aayatham seidheer
4. Parisuthan aaga yaanum maaridavay
Parivoadu alaitheer Um sitha padiyay
Parisutham adhaiyay bayathudan yaan
Niraiveitra dhayai seiguveer
5. Vilithelumbuvoam naam nithirai vittu
Veigam nerungudhay nam ratchipum idho
Parisuthar Yeisuvaiyay sandhithidavay
Baya bakthiyudan seivipoam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: