Quthbul akthab | குரு மணியே குறைகள் அகன்றிட வாரீர் | தஃவா நெறிகள் தளர்ந்துவிடாமல் தழைத்திடவே வாரீர்
Автор: MUHIEDDEEN TV
Загружено: 2020-11-27
Просмотров: 52725
குத்புல் அக்தாபே குருமணியே
குறைகள் அகன்றிட வாரீர்
தக்வா நெறிகள் தளர்ந்துவிடாமல்
தளைத்திடவே முகம் பாரீர் (2)
1. பயகம்பர் குலப் பேரரே பொங்கும்
பக்தாதில் வாழ்வோரே
பக்தி நிலையினில் உயர்ந்தவரே
தனிப் பரங் குதுபே வருவீரே
2. ஹஸன் ஹுஸைனாரின் பரம்பரையோரே
ஹகீகத்தை அறிந்தோரே
மகத்துவ நகரும் மலக்குடன் ஜின்னும்
மதித்திடும் மாண்பு கொண்டோரே
3. உபய பாதங்களை உயர் வலிமார்களின்
தோள்களில் பதிய வைத்தோரே
தேவாதி தேவன் கற்பனையும்
ஏற்புறமாக்கி வித்தோரே
4.வனிதையர் எழுபது பேருடன் ஒருவர்
ஓரிரவில் விபச்சாரம்
செய்திடும் கற்பனையை கனவாக்கிய
காரணர் முஹிய்யத்தீனே (குத்புல்)
5. யா முஹியித்தீன் யாருமில்லை எம்மைக்
காத்திடவே வருவீரே
என்றொரு கூச்சல் கேட்டதும் கள்வரை
மிதிவடி வீசிக் கொன்றோரே
6. சூரியன் சந்திரன் வருடங்கள் மாதங்கள்
வள்ளலே உங்கள் மீதிலே
வரிசை ஸலாத்தினை வழங்கிடும்
கடமை வழமையிலே தவறாதே...
#tamilsufisong #tamilqaseetha
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: