Ezhuthugiren Oru Kaditham | எழுதுகிறேன் ஒரு கடிதம் | HD Video Song | Geeta & Shruti
Автор: Tamil Movieplex
Загружено: 2021-10-19
Просмотров: 1774083
KALKI song Ezhudhugiren Oru Kaditham - எழுதுகிறேன் ஒரு கடிதம்
முத்து முத்து மகளே முகம் காணாத மகளே மாதங்கள் பத்து மனதினில்
Song From Superhit tamil movie Kalki (1996)
Star Cast: Shruti, Rahman, Prakash Raj, Geetha, Renuka.
Music: Deva
Producers: Rajam Balachander, Pushpa Kandaswamy
Director: K. Balachander
Click on the link to subscribe your favourite @Tamil Movieplex
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
LYRICS :
முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்கு கவிதையில்
எழுதும் கடிதம்!
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
முந்நூறு நாள் கர்ப்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாள் ஒரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீ ஆடடி
உலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல்
ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடை ஏது
விழாமலே விழும் மழை நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராது துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
மலடியின் மகளே
மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: