காரியாபட்டியில் சிறுவர் பூங்கா திறக்க வந்த அமைச்சருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து மாணவிகள் வரவேற்பு.
Автор: ranjith seetha
Загружено: 2024-12-11
Просмотров: 1754
காரியாபட்டியில் சிறுவர் பூங்கா திறக்க வந்த அமைச்சருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து மாணவிகள் வரவேற்பு. விளையாட்டு உபகரணங்களில் மாணவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களை விளையாட்டு உபகரணத்தில் அமர வைத்து தானே சுற்றி விட்டு மாணவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கோல்டன் நகரில் ரூ 25 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவை இன்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைக்க வருகை புரிந்தார். பூங்காவை திறந்து வைக்க வருகை தந்த அமைச்சருக்கு அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் ரோஜாப்பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். மாணவிகள் அன்பாக அளித்த ரோஜா பூக்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளி மாணவ மாணவியர்களை வைத்தே அந்த பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவை திறந்து வைத்த அமைச்சருக்கு பள்ளி மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கு ஊஞ்சல் ஆடுவதையும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சறுக்கி விளையாடுவதையும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். மேலும் அங்கிருந்த விளையாட்டு உபகரணம் ஒன்றில் மாணவர்களை அமர வைத்து அமைச்சரே சுற்றி விட்டு மாணவர்கள் விளையாடியதை ரசித்து மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்கே செந்தில், செயல் அலுவலர் முருகன், காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கொண்டு செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: