சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : Sugavaneshwarar Temple, Salem || Happy Salem 360
Автор: Happy Salem 360
Загружено: 2024-05-22
Просмотров: 107
Salem Sugavaneswarar சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில் சிறப்புக்கள்
சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட இந்த கோயில்,
அருணகிரிநாதராலும், ஒளவையாராலும் பாடப்பட்ட இந்த தலம், சேலம் மாநகரின் மையப்பகுதியில்
திருமணிமுத்தாற்றங்களையும் அமைத்துள்ளது.
இத்திருக்கோவிலில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர்,
சப்த மாதர், நால்வர், இரட்டை விநாயகர், ஆலமரச் செல்வர் சன்னிதியில் உள்ளன.
பஞ்சபூத லிங்கங்கள், கங்காடர், காசிவிஸ்வநாதர், ஜேஷ்டாதேவி ஆகிய சுற்றுப்பிரகார சன்னதிகள் அறுபடை வீடு சிற்பங்கள்
கொண்ட முருகப் பெருமான் சன்னிதி, பிரம்மா, சண்டிகேசுவரர், துர்க்கை சன்னதியும் உள்ளன.
இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி உள்ளார். இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட 15 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை விலகும், குழந்தை பாக்கியம்
பெற முடியும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் விநாயகர், அம்மன், தக்ஷிணாமூர்த்தி,
சுப்பிரமணியர் மற்றும் அண்ணாமலையார் சன்னிதிகளும் பல அருமையான கற்சிற்பங்களும் காணப்படுகின்றன.
முருகன் சன்னதியில் மூன்று பக்கச் சுவர்களிலும் அறுபடை வீடும் மூலவர் சிற்பங்கள் உள்ளது. அண்ணாமலையார் உருவம்
ஒரு மரப்பொந்தில் செதுக்கியிருப்பது சிற்பக்கலையில் உச்சமாகும். இந்த கோயிலில் உள்ள வலம்புரி விநாயகரை வழிபட்டால்
பணம் கொட்டும் என்பது ஐதீகம்.
#happy #happysalem #salem #mysalemcity #salemgod #salemcity #happysalem360 #jolly #god #festival #festivals
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: