33 கீர்த்தனை | ஆ அம்பர உம்பர | Aa Ambara umbara | composer thought | Michael Samraj
Автор: Composer Thought
Загружено: 2023-05-12
Просмотров: 909
[email protected]
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, phone pay : 9443559470
பல்லவி
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன்[1] பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார்,-அமலாதிபன் பிறந்தார். - ஆ!
சரணங்கள்
1. அன்பான பரனே!-அருள் மேவுங் காரணனே!-நவ
அச்சய[2] சச்சித-ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
2. ஆதம் பவமற,-நீதம்[3] நிறைவேற,-அன்று
அல்லிராவினில்-தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். - ஆ!
3. ஞானியர் தேட,-வானவர் பாட,-மிக
நன்னய, உன்னத-பன்னரும்[4] மேசையா
இந்நிலம் பிறந்தார். - ஆ!
4. கோனவர் நாட, தானவர்[5] கொண்டாட-என்று
கோத்திரர்[6] தோத்திரஞ்-சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். - ஆ!
5. விண்ணுடு தோண,-மன்னவர் பேண,-ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
யோ. யாக்கோப்பு
[1]. அதிபன்
[2]. கடவுள்
[3]. நீதி
[4]. சொல்லமுடியாத
[5]. அரசர்
[6]. இனத்தார்
33 கீர்த்தனை | ஆ அம்பர உம்பர | Aa Ambara umbara | composer thought | Michael Samraj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: