"இஸ்ரவேலை ஏன் அழிக்க முடியாது - 5 அசைக்க முடியாத பைபிள் உண்மைகள்!"
Автор: Ruah Glorious Revival Ministries-Official
Загружено: 2025-06-21
Просмотров: 10981
"இஸ்ரவேலை ஏன் அழிக்க முடியாது - 5 அசைக்க முடியாத பைபிள் உண்மைகள்!" "Why Israel Can’t Be Destroyed – 5 Unshakable Biblical Facts!"
3,000 ஆண்டுகளுக்கும் மேலாக, அநேக பேரரசுகள் எழுச்சி பெற்று வீழ்ச்சியடைந்துள்ளன... அநேக ராஜ்ஜியங்கள் இஸ்ரேலை வரைபடத்திலிருந்து துடைத்தெறிய முயன்றன. ஆனால், நாடுகடத்தல், துன்புறுத்தல், போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் மீறி, இஸ்ரேல் என்னும் தேசம் இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.
இது எப்படி சாத்தியம்? இது இராணுவ வலிமையா? உலகளாவிய கூட்டணிகளா? அவர்களுடைய அறிவு கூர்மையா ? அல்லது... இன்னும் ஏதாவது பெரிய சக்தி அவர்களை பாதுகாக்கிறதா ?"
இதற்கான பதிலை தான் இந்த வீடியோவில் , பைபிள் ஆதாரத்தின் அடிப்படையில் நாம் பார்க்க போகிறோம் . எனவே கடைசிவரையில் இந்த செய்தியை கேளுங்கள் . இது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் . இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை பகிர்ந்து , அவருடைய சாட்சிகளாய் வாழ்வோம் .
தேவனுடைய உடன்படிக்கை தேவன் இஸ்ரவேலர்களோடு நிபந்தனையற்ற, நித்திய (என்றும் அழியாத) உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார் . இதை பைபிளில் ஆதியாகமம் 17:7-8 வசனங்களில் பார்க்க முடியும் . தேவன் ஆபிரகாமுடனும், அவனுடைய சந்ததியினருடனும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதாக கூறுகிறார். இந்த உடன்படிக்கையின்படி, கானான் தேசம் ஆபிரகாமின் சந்ததியினருக்கு சொந்தமானதாக இருக்கும் என்றும், அவர் அவர்களுக்கு தேவனாகவும், அவர்கள் அவருக்கு மக்களாகவும் இருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். மேலும், இது ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். கானான் தேசம் என்பது இப்போதுள்ள , present-day Israel, Palestine, and parts of Lebanon, Syria, and Jordan. தேவனின் வாக்குறுதி தற்காலிகமானது அல்ல. அது மனித பலத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நித்தியமானது, ஒருபோதும் தனது வார்த்தையை மீறாதவரால் முத்திரையிடப்பட்டது.
இஸ்ரேலின் பாதுகாப்பு பற்றிய தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் எரேமியா 31:35-36 35 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
36 இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்: தேவன் இஸ்ரவேலின் இருப்பை பிரபஞ்ச விதிகளுடன் இணைக்கிறார். இரவும் பகலும் இருக்கும் வரை, இஸ்ரவேல் நிலைத்திருக்கும்.
இஸ்ரவேல் என்கிற தேசம் அரசியல் மாற்றத்தினாலையோ அல்லது தற்செயலாகவோ தோன்றினது அல்ல அது தெய்வீக தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்
இஸ்ரவேல் பல நாடுகளுக்கு சாட்சியாக தேவனால் வைக்கப்பட்டுள்ளது ஏசாயா 43:10
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
"இஸ்ரேலின் தொடர்ச்சியான உயிர்வாழ்வு, உலகிற்கும் வரலாற்றிற்கும் ஒரு செய்தியாகும் - தேவன் உண்மையுள்ளவர்." தேவனின் நீதி, கருணை மற்றும் வாக்குதத்தங்களுக்கு இஸ்ரேல் ஒரு வாழும் சான்றாகும் - மேலும் எந்த சக்தியாலும் அந்த சாட்சியத்தை அழிக்க முடியாது
மேசியா ( இயேசு கிறிஸ்து ) எருசலேமுக்குத் திரும்புவார் கடைசிகால தீர்க்கதரிசனம் இஸ்ரேலைச் சுற்றியே இருப்பதால் அது இருக்க வேண்டும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இஸ்ரவேல் தேசத்தையும் , அதின் மக்களையும் சார்ந்துள்ளது - எனவே தேவன் அந்த தேசம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கிறார். "அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரேயிருக்கிற ஒலிவ மலையின்மேல் நிற்கும்; அப்பொழுது ஒலிவமலை நடுவாக இரண்டாய்ப் பிளந்து, கிழக்குமேற்காக ஒரு பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்; அதிலே பாதி வடபக்கத்திலும் பாதி தென்பக்கத்திலும் விலகிப்போகும்." சகரியா 14:4. "பைபிள் தீர்க்கதரிசனம் தெளிவாக உள்ளது - இயேசு நியூயார்க் அல்லது ரோமுக்குத் திரும்பமாட்டார், ஆனால் எருசலேமுக்குத் திரும்புவார்."
இஸ்ரவேலை அழிக்க முயற்சிப்பவர்களை தேவன் நியாயந்தீர்க்கிறார் தேவன் இஸ்ரவேலை காப்பாற்றுவது மட்டுமல்ல - அதை எதிர்க்கும் நாடுகளை அவர் தீவிரமாக நியாயந்தீர்க்கிறார். வரலாற்று ஆதாரங்கள் இதை நமக்கு காட்டுகிறது . கர்த்தரின் வேதம் அதை உறுதிப்படுத்துகிறது. சகரியா 12:3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். யோவேல் 3:2-3 நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்.அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்
#tamilchristianmessage
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: