சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில் | நாக தோஷம், ராகு கேது தோஷம் & கால சர்ப்ப தோஷம் நிவர்த்தி தலம்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2025-10-22
Просмотров: 2272
நாகதோஷம் நீக்கும் சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில்
மூலவர்: சேஷபுரீஸ்வரர்
அம்பாள்: திரிபுர சுந்தரி
தலவிருட்சம்: வில்வம்
ஊர்: சேஷமூலை
மாவட்டம்: நாகப்பட்டினம்
சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சேஷமூலை கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது, மேலும் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக இறைவன் அருள் பாலிக்கிறார்.
சிதிலமடைந்திருந்த இவ்வாலயம், நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மீகத் தொண்டர்கள் ஆற்றிய திருப்பணிகளாலும், கோயில் நிர்வாகிகளின் கொடைகளாலும்-உதவிகளாலும் செம்மையுற்றது. நாளை 3.6.2010 வியாழக்கிழமையன்று இக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தலவரலாறு
நாக இனங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், தான் சிவன் தலையில் இருப்பதால் எல்லோராலும் பூஜிக்கப்படுகிறோம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கர்வப்பட்டான். அப்போது சிவபெருமான் கோபம் கொண்டு ஆதிசேஷனை வீசி எறிந்தார். அந்தப் பாம்பின் தலை ஆயிரம் பிரிவுகளாக ஆனது. பின்பு அந்தத் தலைகள் கடும் தவம் புரிந்து, அனைத்துக் கலைகளும் அறிந்து ஞானியாகி, பதஞ்ஜலியாகப் பிறந்தது. அப்போது சிதம்பரத்திலும், திருவாரூருக்கு மேற்கே விளமல் என்ற திருத்தலத்திலும், தற்போது சேஷமூலை என்று அழைக்கப்படும் ஆதிசேஷபுரியாகிய இந்தத் தலத்திலும் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திகளை பூஜித்தார் பதஞ்ஜலி. அதனால் சாப விமோசனமும் பெற்றார்.
நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், சேஷமூலையில் சிவபெருமானை தொடர்ந்து பூஜித்து வருவதால் நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்தத் தலம் தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பிராத்தனை
அம்பாள் சந்நிதி, மூலவர் கருவறையின் வலதுபுறத்தில் இருப்பதால் இது கல்யாண கோல ஸ்தலமாகவும், திருமணத் தடை நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. நாக தோஷம் நீங்க ராகு கேது தோஷம் காலசர்ப்ப தோஷம் நீங்க வழிபட வேண்டிய தலம்
கோயில் Google Map Link
https://maps.app.goo.gl/n82AZp3gq2cgN...
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 9655896987
if you want to support our channel via UPI Id
nava2904@cnrb
Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
Join this channel to get access to perks:
/ @thiruvallaradharani
தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: