#karaikudi
Автор: சொ. வினைதீர்த்தான்
Загружено: 2025-12-04
Просмотров: 61
காரைக்குடி SMS மேல்நிலைபள்ளியில் 3.12.2025 அன்று திரு சொ.வினைதீர்த்தன் நடத்திய வாழ்வியல் திறன் பயிற்சியில் 7 ஆம் வகுப்பு மாணவர் செல்வன் பிரணனவ் Feed back கருத்து!
காரைக்குடியின் பாராம்பரியமான நூற்றாண்டு கண்ட பள்ளி! அழகப்பர், பல்துறை வித்தகர்கள் படித்த ஸ்ரீ மீனாட்சி சுந்திரேசுவரர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8, 9 வகுப்புகளில் படிக்கிற 250 பிள்ளைகளுக்குத் தன்முன்னேற்ற வாழ்வியல் திறன் பயிற்சி உரை நல்கும் நல்வாய்ப்பு பள்ளியின் ஆற்றல்மிகு தலைமையாசிரியர் முனைவர் திரு அண்ணாமலை அவர்களின் அன்பால் அமைந்தது பெருமகிழ்ச்சி.
ஒருங்கிணைத்த ஆசிரியப் பெருந்தகை திரு யோகீசுவரன், திருமிகு உமாமகேசுவரி,, உடற்கள்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், பிற ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ஆர்வத்துடன் பங்கேற்ற 11 வயதில்ருந்து 14 , 15 வயதிலான மாணவர்களுக்குக் கதைகள், குறள், அனுபத் துணுக்குகள் வழியாக ஒவ்வொரு மாணவரும் பொறுப்புணருமாறு வழிகாட்டும் உரையாக அமைந்தது.
மாணவர்கள் கற்றதும் பெற்றதும் குறித்து எழுதித்தந்த Written Feed back தீபத் திருநாள் விழா நாளில் H.M முனைவர் திரு அண்ணாமலை அவர்களால் நான் பெற்ற விருது!
கீழ்க்கண்டவை அவற்றில் சில:-
1.நீங்க 100 ஆண்டு காலம் வாழ்க.
2.உங்க பேச்சு இனிமை; எளிமை; கற்கண்டு; மிகவும் பயனுண்டு!
3.ஒவ்வொரு சொல்லும் புரிந்தது; பயனுள்ளது.
4.மழை; பள்ளி போகவில்லை என்று கூறினேன். அம்மா இல்லை போ என்றார்கள். பள்ளிக்கு வராது இருந்திருந்தால் உங்கள் உரையைக் கேட்டிருக்கமாட்டேன். நல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. நன்றி.
சொ.வினைதீர்த்தான்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: