வானத்தின் உயரமும் || Pr.Anandhan Alphonse || Jeevanathi Songs வரிகளுடன் | Tamil Christian New Song |
Автор: DRM CHURCH CHENGALPATTU
Загружено: 2020-05-09
Просмотров: 37189
Jeevanathi Ezhupputhal Paadalgal
இந்த பாடலை எழுதி இராகம் அமைத்து, பாடியவர் இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த Pr.Anamdhan Alphonse அவர்கள். ஐயா அவர்களின் YouTube link / @ananthanalphonse கொடுத்துள்ளேன்.
வானத்தின் உயரமும் - 👇🏻பாடல்வரிகள்
வானத்தின் உயரமும்
பூமியின் ஆழமும்
ஆராய்ந்து முடியாதது
உலகத்தின் அதிசயம்
படைத்தவர் ரகசியம்
கர்த்தரின் செயல் தான் அது
1. வானையும் பூமியையும்
படைத்தவர் யார்
ஆடாமல் அசையாமல்
அஸ்திபாரமிட்டவர் யார்
வனாந்திர வயல்வெளியில்
விதைபோட்ட வித்தகர் யார்
அவாந்திர வெளிகளிலே
விருச்சங்களை நட்டவர் யார்
அவர் ஆதி அந்தமில்லா தேவன்
அகிலம் படைத்த ராஜன்
அவரின் கரத்தால்
உலகம் உண்டானது - 2
வானத்தின்
2. அதிகாலை பனித்துளியை
பொழிந்தவர் யார்
வான்மேகம் மழையாய் பொழியும்
அதிசயம் செய்தவர் யார்
கருவில் உள்ள குழந்தைக்கும்
கல்லில் உள்ள தேரைக்கும்
உணவளித்து பாதுகாக்கும்
பரம்பொருள் யார்
அவர் ஆதி
3. காற்றுக்கு பண்டகசாலை
அமைத்தவர் யார்
கரைபுரளும் கடலுக்கும்.
ஒரு எல்லைக்கோடு வைத்தவர் யார்
எரிமலை குமுறும் நேரம்
கடல் பொங்கும் சுனாமி நேரம்
பூமியே அதிரும் கோரம்
அறிந்தவர் யார்
அவர் ஆதி
4. ஈரைந்து மாதத்தில்
பிறப்பதை தெரியவைத்தார்
எந்தநாள் மரணம் என்பதை
ரகசியமாய் ஏன் வைத்தார்
தேவனின் ரகசியங்களை
அறிந்தவர் எவரும் இல்லை
சிந்திக்க காலம் இல்லை
தப்பிக்க அவர்தான் எல்லை
வானத்தின்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: