Nambikkai Serial Title Song - AVM Productions
Автор: AVM Productions - Serials
Загружено: 2012-12-21
Просмотров: 635620
Nambikkai Tamil TV Serial Title Song - AVM Productions. To watch other videos in AVM Productions - TV Serials Channel visit - / avmproduction
பாடல் : வைரமுத்து
இசை : தினா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... இல்லாமல் நாளைஇல்லை...
நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... இல்லாமல் வாழ்வுஇல்லை...
நட்பு என்பதும்நம்பிக்கை... ஒரு
கற்பு என்பது நம்பிக்கை...
முயற்சி என்பதும் நம்பிக்கை... நாம்
மூச்சு விடுவதும் நம்பிக்கை...
தலையை இழந்த அருகம்புல்லும்
தளிர்த்துவருவது நம்பிக்கை...
ஓ... தளிர்த்துவருவது நம்பிக்கை...
அப்பா என்னும் உறவும் கூட
அம்மா கொடுத்த நம்பிக்கை...
ஆண்டவன் என்னும் கற்பனைகூட
அச்சம் கொடுத்த நம்பிக்கை...
அப்பா என்னும் உறவும் கூட
அம்மா கொடுத்த நம்பிக்கை...
ஆண்டவன் என்னும் கற்பனைகூட
அச்சம் கொடுத்த நம்பிக்கை...
அடுத்த வருடம் மழை வருமென்பது
உழவன் கொண்ட நம்பிக்கை....
அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது
அரசியல்வாதியின் நம்பிக்கை...
அந்தரத்திலே பூமி சுற்றலும்...
ஆகாயத்திலே நிலவு நிற்றலும்...
எல்லைக்குள்ளே கடல்கள் நிற்பதும்...
இதயக்கூட்டிலே ஜீவன் நிற்பதும்
நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை... ஓ...
நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை...
ரத்தம் சத்தம் போடும் வயதில்
நான் தான் என்பது நம்பிக்கை...
ஓடி ஆடி ஓயும் வயதில்
ஊன்று கோல் மேல் நம்பிக்கை....
ரத்தம் சத்தம் போடும் வயதில்
நான் தான் என்பது நம்பிக்கை...
ஓடி ஆடி ஓயும் வயதில்
ஊன்று கோல் மேல் நம்பிக்கை....
விதியே பெரியது என்பவர்கெல்லாம்
காத்துக் கருப்பில் நம்பிக்கை...
மதியே பெரியது என்பவர்கெல்லாம்...
நம்பிக்கை மீது நம்பிக்கை...
தலைக்கு மேலே வானம் இருப்பதும்...
தரைக்கு மேலே பாதம் நிற்பதும்...
காசு பணங்கள் சேர்த்துவைப்பதும்..
தூங்கி விழிப்போம் என்று நினைப்பதும்...
நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை... ஓ...
நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... இல்லாமல் நாளைஇல்லை...
நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
நம்பிக்கை... இல்லாமல் வாழ்வுஇல்லை...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: